சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படம் கடந்த, நேற்று முன்தினம் 10ம் தேதியே வெளியாக வேண்டிய படமாக இருந்தது. ஆனால் நடிகர்ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் அந்த தேதியில் ரிலீஸ் ஆனதால், வருகிற நவம்பர் 14ஆம் தேதிக்கு தங்குவா படம் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில், மிக பிரமாண்டமாக பான் இந்தியா படமாக உருவாகியுள்ள கங்குவா படம் முதல் பாகமாக, நவம்பர் 14ம் தேதி வெளிவருகிறது. இதையடுத்து கங்குவா 2ம் பாகம் ஓரிரு ஆண்டுகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2ம் பாகத்தில் நடிகர் கார்த்தி, சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா, ஏற்கனவே நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். விஜய் சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். மேலும் விடுதலை 2 படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்து வருகிறார்.
இதற்கிடையே விஜய் சேதுபதியின் மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாக உள்ள படம் பீனிக்ஸ். இந்த படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலமாக ஸ்டண்ட் டைரக்டர் அனல் அரசு, திரைப்பட இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் பீனிக்ஸ் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கையில் விலங்குடன் குற்றவாளியாக முகத்தை மூடிய நிலையில் சூரியா காணப்பட்டார். பின்னர் ஒரு பாக்ஸிங் வீரர் போல் சண்டைக் காட்சிகளும் ஈடுபட்டிருந்தார். தற்போது பீனிக்ஸ் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் வருகிற நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால் அதே நாளில்தான் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படமும் வெளியாகிறது.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள பீனிக்ஸ் படம் பெரிய அளவில் வெற்றியை பெறுகிறதா அல்லது சூர்யத நடித்த கங்குவா படம் பெரிய அளவில் வசூல் மழையில் சாதிக்கப் போகிறதா என்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 2 சூர்யாக்களில் எந்த சூர்யா முன்னிலை பெறுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு மத்தியில் சீனியர் நடிகர் சிவக்குமார் மகன் சூர்யா, விஜய் சேதுபதி மகன் சூர்யா என சீனியர் நடிகருடன், ஜூனியர் நடிகர் படம் மோதுவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.





