தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பேரரசு. குறிப்பாக அவரது படத்தின் டைட்டில்கள் எப்போது ஊர் பெயர்களை மையமாக கொண்டிருக்கும். அவர் இயக்கிய படங்கள் பழனி திருத்தணி திருப்பாச்சி சிவகாசி திருவண்ணாமலை தர்மபுரி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விஜய் நடித்த படங்கள் சிவகாசி திருப்பாச்சி ஆகும்.
இயக்குனர் பேரரசு இயக்கிய திருப்பாச்சி சிவகாசி என 2 படங்களுமே மிகப்பெரிய ஹிட் படங்களாக இருந்தன. குறிப்பாக விஜய்க்கும் இது நல்ல ஆக்சன் படங்களாக இருந்தன. இப்போதும் இந்த 2 படங்களும் ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்படுகின்றன. சிவகாசி படத்தில் இடம்பெற்ற கோடம்பாக்கம் ஏரியா ஓட்டு கேட்டு வாரியா பாடல் இன்றும் டிரண்டிங்கில் உள்ளது.
நடிகர் விஜய் அரசியல் இயக்கிய போதும், அவர் அரசியல் கூட்டங்களில் பேசிய போதும், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட போதும் விஜய் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்ற போதும் இயக்குனர் பேரரசு விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தார். ஆனால் இப்போது முதன்முறையாக விஜய்க்கு எதிரான கருத்தை அவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பேரரசு கூறியதாவது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆட்சி செய்த காலத்தை இன்று வரை நான் பொற்காலம் என்று சொல்வேன். ஏனென்றால் அவர் ஆட்சியில் இருக்கும் போது அப்போதுதான் அரசியல் படங்கள் அதிகமாக வந்தது.
ஒரு பக்கம் மணிவண்ணன் சார் இன்னொரு பக்கம் விசி குகநாதன் சார் இன்னோரு பக்கம் இராமநாராயணன் கலைஞர் கதை வசனத்தில் படங்கள் வந்தது. முக்கியமாக எஸ்ஏ சந்திரசேகர் சார் படங்களும் போது நிறைய வந்தன. எல்லா பக்கமும் அரசியல் படங்களாக வந்தது. எஸ்ஏசி படத்தில் எல்லாம் முதல்வரை ரோட்டில் ஓட விடுவாங்க. அடிப்பாங்க.
இப்போது அப்படி படம் எடுக்க முடியுமா? எல்லாத்தையும் சகித்துக்கொண்டவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அவர் இருக்கும் போதுதான் நிறைய அரசியல் படங்கள் வந்தது. அவருக்கு பிறகு அரசியல் விமர்சனங்களை தாங்குகிற சக்தி அரசியல் தலைவர்களுக்கு இல்லை. எந்த அரசியல் பேசினாலும் நம்மை தான் திட்டறாங்களோ என்று ஒரு பயம். எம்ஜிஆர் ஏன் எல்லாத்தையும் விட்டார் என்றால் அவருக்கு மக்கள் மீது நம்பிக்கை இருந்தது என்று இயக்குனர் பேரரசு பேசியிருக்கிறார்.





