- Advertisement -
Homeபொழுதுபோக்குநள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், பிரபல நடிகருக்கு கத்திக்குத்து, மருத்துவமனையில் அனுமதி - திக்...

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், பிரபல நடிகருக்கு கத்திக்குத்து, மருத்துவமனையில் அனுமதி – திக் திக் மனநிலையில் பாலிவுட்!

- Advertisement -

இந்தியில் பிரபல நடிகராக இருப்பவர் சயீப் அலிகான். 54 வயதான இவர் போபால் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடி நடிகை சர்மிளா தாகூர் தம்பதி மகன். கடந்த 2012ம் ஆண்டு பிரபல இந்தி நடிகை கரீனா கபூரை, சயீப் அலிகான் 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

மும்பையில் உள்ள பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் சயீப் அலிகான் குடும்பத்துடன் வசிக்கிறார். வழக்கம்போல நேற்றிரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 2. 30 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம மனிதர், அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அந்த நபர் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வீட்டுக்குள் புகுந்ததாக தெரிகிறது.

- Advertisement -

இந்நிலையில் சத்தம் கேட்டு, வீட்டில் உள்ளவர்கள் விழித்துக் கொண்ட போது சயீப் அலிகான் அந்த நபரை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரை பிடிக்க முயன்றார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியது. அந்த நேரத்தில் அந்த மர்மநபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சயீப் அலிகானை சராமரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் நடிகர் சயீப் அலிகானின் கழுத்து முதுகு தண்டுபடம் பகுதி, கை உள்ளிட்ட 6 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் 2 இடங்களில் ஆழமான காயத்தால் ரத்தம் அதிகமாக கொட்டியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் சயீப் அலிகானை பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அவருக்கு ஆபரேஷன் நடந்துள்ளது.

- Advertisement -

அந்த மருத்துவமனை தலைமை நிர்வாகி கூறுகையில், அதிகாலை 3:30 மணிக்கு சயீப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது அதில் இரண்டு இடங்களில் ஆழமான காயம் உள்ளது. அவருக்கு ஆபரேசன் நடந்துள்ளது. அவரது உயிருக்கு இப்போது ஆபத்து இல்லை என்று கூறி இருக்கிறார்.

இந்நிலையில் சயீப் அலிகானின் மனைவி கரீனா கபூர் மருத்துவமனையில் கணவருடன் இருந்து அவரை கவனித்து வருகிறார். இது குறித்து பாந்த்ரா போலீஸ் உயரதிகாரிகள் சயீப் அலிகான் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரபல நடிகர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும்ம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்