- Advertisement -
Homeபொழுதுபோக்குவாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை கண்டிக்கிறேன் - நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு கடும்...

வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை கண்டிக்கிறேன் – நடிகர் ராகவா லாரன்ஸ் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர் சேரன்!

- Advertisement -

நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் அரசியலுக்கு வருவதாக ஒரு வீடியோவில் தெரிவித்தார். மேலும் நான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று ரசிகர்களே கருத்துகளை கூறுமாறும் அதில் கூறியிருந்தார். அதன்பிறகு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் கூறினார்.

அப்போது தவெக அரசு குறித்து பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், தெருநாய்கள் புதுசா நம்மை பார்த்தா கத்தும். அதுக்கு பிஸ்கட் போடணும். சில தெருநாய்களுக்கு பிஸ்கட் பிடிக்காது. அதுக்கு நான்வெஜ் தான் பிடிக்கும். பிரியாணி போடணும். அப்படி போட்டா தான் அது கத்தாமல் இருக்கும்.

- Advertisement -

அந்த மாதிரிதான் புதுசா ஆட்சிக்கு வந்திருக்கிற தவெக அரசுக்கு கால அவகாசம் கொடுக்கணும் என்று ராகவா லாரன்ஸ் பேசியிருந்தார். தெருநாய்களுக்கு பிஸ்கட் பிரியாணி போல பொதுமக்களுக்கு தேவையானதை கொடுக்க தவெக அரசுக்கு அவகாசம் கொடுக்கணும் என்று அவர் பேசியது கடும் சர்ச்சையானது.

இதுகுறித்து இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, உங்கள் மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் வருகிறது. எவ்வளவு அறிவுப்பூர்வமான விளக்கம் லாரன்ஸ். உங்கள் சிந்தாந்தத்தில் மக்களை நீங்கள் தெரு நாயாக சித்தரிப்பதையும், பிஸ்கட்டும் பிரியாணியும் போட்டு மக்களை குரைக்க விடாமல் பார்த்துக்கொள்ளணும் எனக்கூறி ஒரு வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.

- Advertisement -

மக்களின் எதிர்ப்பு குரல்களுக்கு ஏதாவது போட்டு வாயை மூடவேண்டும் என நீங்கள் சொல்வதில் உங்கள் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என புரிந்துவிட்டது. இதுவரை உங்களிடம் இருந்ததாக கருதப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் கொள்ளச் செய்கிறது உங்கள் பேச்சு.

ஆனால் உங்களுக்கும் இந்த மக்கள் ஓட்டு போடுவார்கள், கவலை வேண்டாம். இப்படிக்கு பிஸ்கட்டு பிரியாணிக்காக கையேந்தி நிற்காத மக்களில் ஒருவன் என்று இயக்குநர் சேரன் அந்த பதிவில் கூறியிருக்கிறார். இயக்குனர் சேரனை போலவே நடிகர் தாடி பாலாஜியும் ராகவா லாரன்ஸ்க்கு மன்னிப்பு கேட்குமாறு வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்