- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பேரரசு கூறியதாவது, ஒரு காலத்தில் ஏ படம் அப்படீன்னா ஒண்ணே ஒண்ணு தான். படத்துல ஆபாசம் கவர்ச்சி இருக்கும் என்று நினைப்போம். பிட்டு கூட போடுவாங்க. அதைத்தான் அப்போ ஏ படம் என்று நினைத்தோம். ஆனா இப்போ ஏ படம் அப்படீன்னா ஆபாசம் கூட இல்ல. வன்முறை தான். வெட்டுறான் கை கால் தலை எல்லாம் பறக்குது. பைப்ல தண்ணீ பீச்சி அடிக்கிற மாதிரி இரத்தம் அடிக்குது. அப்போ இன்னைக்கு ஏ படம் அப்படீங்கறது வன்முறையை தான் காட்டுகிறார்கள். ஆபாசத்தை இல்லை. 300 கோடி ரூபாய் போட்டு படம் எடுத்து குடும்பமாக வந்து பார்க்கிற பெரிய ஸ்டார் படத்துக்கு கூட ஏ சர்டிபிகேட் கொடுக்கறாங்க. ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் கொஞ்சமாச்சும் பொறுப்பும் அக்கறையும் இருக்கணும் என்று இயக்குனர் பேரரசு கூறியிருக்கிறார்.





