- Advertisement -
Homeபொழுதுபோக்குமாநில அரசின் திரைப்பட விருதுகளை உடனே கொடுங்க, 10 ஆண்டுகள் கழித்து கொடுக்காதீங்க - தமிழக...

மாநில அரசின் திரைப்பட விருதுகளை உடனே கொடுங்க, 10 ஆண்டுகள் கழித்து கொடுக்காதீங்க – தமிழக அரசுக்கு இயக்குனர் பேரரசு வேண்டுகோள்!

- Advertisement -

சென்னையில் சைலன்ட் இன்புளூன்சர் என்ற ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசியதாவது, தவெக ஆட்சி தொடருமா என்று பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்தனர். விஜய் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டார். விஜய்க்கு வாழ்த்துகள்.

நிறைய ஹீரோக்கள் முயற்சி செய்து முடியாததை முதல் முயற்சியிலேயே சாதித்தவர் விஜய். தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு இப்படி சாதித்தவர் விஜய் தான். இதை ஜீரணிக்க முடியாமல் பலர் கஷ்டப்படுகிறார்கள். அவர் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று முன்பே நான் பேசியிருக்கிறேன். இன்னும் இரண்டு தலைமுறைக்கு விஜய் ஆட்சியில் இருப்பார்.

- Advertisement -

அவரிடம் வேகம் இருக்கிறது. விவேகம் இருக்கிறது. வயதும் இருக்கிறது. திரை உலகத்திற்கு அவர் சப்போர்ட் செய்வார் என்று இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசினார். இந்த விழாவில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு பேசியதாவது, எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வரிசையில் விஜய் முதல்வராக இருக்கிறார். இது சினிமாத்துறைக்கு பெருமையான விஷயம்.

சினிமாவில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அதுகுறித்து பல மேடைகளில் புலம்பிக் கொண்டிருக்கிறோம். அனைத்துக்கும் விஜய் ஆட்சி விடிவு காலமாக அமைய வேண்டும். அவர் ஆட்சியில் மாநில விருதை உடனே கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு அந்த விருதை கொடுக்க வேண்டும். 2026ம் ஆண்டுக்கான விருது 2027ல் கொடுக்கணும். 2037ம் ஆண்டில் கொடுக்க வேண்டாம்.

- Advertisement -

இதனால் குழந்தை நட்சத்திரம் விருது பெறுபவர்கள் 10 ஆண்டுகள் கழித்து தங்கள் குழந்தைகளுடன் வருகிறார்கள். ஹீரோயின் விருது வாங்குபவர்கள் 10 ஆண்டுகள் கழித்து அம்மா வேடத்திற்கு மாறிவிடுகிறார்கள். திரையுலகத்தை எம்ஜிஆர் கருணாநிதி குடும்பம் மாதிரி நினைத்தார்கள். விஜயும் அப்படியே நினைத்து நடத்த வேண்டும் என்று இயக்குனர் பேரரசு பேசினார்.

தொடர்ந்து துள்ளாத மனமும் துள்ளும் என்ற விஜய் நடித்த படத்தை இயக்கிய இயக்குனர் எழிலும் விஜய் குறித்து வாழ்த்தி பேசினார். சில மாதங்களுக்கு முன்பு திமுக அரசு 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை ஒரே விழாவில் வழங்கியது. அதை தான் இயக்குனர் பேரரசு மறைமுகமாக சுட்டிக்காட்டி மாநில அரசு வழங்கும் திரைப்பட விருதுகளை தவெக அரசு ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்