- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் சதி நடக்கிறது.. இப்படியே போனா என்ன ஆகுறது - இயக்குநர் பேரரசு ஆதங்கம்

தமிழ் சினிமாவில் சதி நடக்கிறது.. இப்படியே போனா என்ன ஆகுறது – இயக்குநர் பேரரசு ஆதங்கம்

- Advertisement -

ஈ.கே முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள “பார்க்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசியிருந்த வேளையில் முன்னணி இயக்குனர் பேரரசு பேசிய சில விடயங்கள் தான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

அக்சயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜன் இந்த பார்க் திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இந்த படத்தில் தமன், ஸ்வேதா டோரத்தி, விஜித் சரவணன், பிளாக் பாண்டி, ரஞ்சினி நாச்சியார், சித்தா தர்ஷன் மற்றும் ஜெயந்தி மாலா என பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பேரரசு கூறுகையில் : இப்போது எல்லாம் இயக்குனர்கள் எல்லாருமே நடிகர்களாக மாறிவிட்டார்கள். இங்கே இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ஆர்.வி உதயகுமார் கூட நடிகர் ஆகிவிட்டார்.

ஏற்கனவே இயக்குனராக இருந்த சிங்கம் புலி இப்போது முழுநேர நடிகராகி விட்டார். இப்படி தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாக மாறி வருகிறார்கள். அதனால் தற்போது கோலிவுட் சினிமாவில் இயக்குனர்களுக்கு தான் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இப்படி படத்தை எடுக்க வேண்டிய இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாக மாறினால் வருங்காலத்தில் இயக்குனர்கள் இருப்பதே கடினமாகிவிடும். இந்த படத்தின் கதாநாயகி ஸ்வேதா கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள்.

அதன்பிறகு எல்லாம் இளைத்தவர்களாக இருந்து வந்தார்கள். கொழு கொழு என்று இருக்கும் கதாநாயகிகளுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த படத்தின் கதாநாயகி ஸ்வேதா அப்படியே இருக்கிறார் அவருக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என இயக்குநர் பேரரசு பேசியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்