- Advertisement -
Homeபொழுதுபோக்குகரூர் சம்பவத்தில் விஜய் உடனே சென்னைக்கு திரும்பி வந்தது சரியா? - இயக்குனர் பேரரசு கொடுத்த...

கரூர் சம்பவத்தில் விஜய் உடனே சென்னைக்கு திரும்பி வந்தது சரியா? – இயக்குனர் பேரரசு கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் பேரரசு. நடிகர் விஜய் நடித்த சிவகாசி திருப்பாச்சி ஆகிய படங்களை இயக்கியவர். கரூரில் நடந்த துயர சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் இயக்குனர் பேரரசு கூறியதாவது, உயிரிழப்பு என்பது எந்த குடும்பத்துக்கும் பேரிழப்பு. அதை இழப்பீடுகளை கொடுத்து ஈடு செய்ய முடியாது. விஜய் போன்ற பெரிய தலைவர்கள் மக்கள் உயிருக்கு மதிப்பளித்து இடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்துச் செல்வது தவறு. சந்தோஷத்துக்காக கூட்டிட்டு போறீங்க, ஆனா உயிர் போனால் எப்படி சந்தோஷம் வரும். எது எப்படி இருந்தாலும் உயரிழப்புக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். அதிகமான ஆட்கள் இருந்ததால் மின்சாரம் தடைபட்டிருக்கலாம். வேண்டும் என்றே செய்தார்களா அல்லது விபத்தா என்பது விசாரணைக்கு தெரிய வரும். சம்பவம் நடந்தவுடன் விஜய் எதுவும் பேசாமல் சென்றபோது சிரித்தபடி போட்டோ எடுத்தது குறித்து பலரும் விமர்சிக்கின்றனர். அது ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ, சிலர் வேண்டும் என்றே பரப்புகிறார்கள்.

- Advertisement -

மேலும் அந்த சூழலில் விஜய் அங்கு இருந்திருக்க கூடாது. முதலமைச்சர், அமைச்சர்களுக்கு இருக்கும் அதிகாரம் விஜய்க்கு இல்லை. எனவே அவர் கரூரில் இருந்து சென்னைக்கு வந்ததுதான் சரி. எம்ஜிஆர் இறந்தபோது கலைஞர் போகல. அங்கே என்ன நடக்குமுன்னு தெரியாது. தொண்டர்கள் உணர்ச்சி வேகத்தில் இருப்பார்கள். அப்படி இருக்கும்போது விஜய் மாதிரி அதிகாரபலம் இல்லாதவங்க போய் சிக்க முடியாது. சில இடங்களுக்கு போகாமல் தவிர்ப்பதே நல்லது.

இதில் காவல்துறை உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. அவர்கள் கேட்ட இடத்தை கொடுக்காமல் குறுகலான இடத்தில் அனுமதித்தது தவறு. விஜய் தரப்பில் இருந்தும் அப்படியான இடத்தை ஊருக்கு நடுவே பிரச்சாரம் செய்ய கேட்கக்கூடாது. ஊருக்கு வெளியே பிரச்சாரம் செய்ய இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அரசியலில் அனுபவம் இல்லாத விஜய் மற்றும் புஸ்லி ஆனந்த் போன்றவர்களை காவல்துறை வழிநடத்த வேண்டும். காவல்துறையின் பேச்சை அவர்களும் கேட்க வேண்டும்.

- Advertisement -

விஜயை கைது செய்ய வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர். அப்படி செய்தால் பல அரசியல் தலைவர்களையும் கைது செய்ய வேண்டியது வரும். எல்லோரையும் உள்ளே தூக்கி போட வேண்டியதுதான். முதலமைச்சர் கள்ளக்குறிச்சி சம்பவத்தின் போது ஏன் உடனே போகலே? எல்லா உயிரும் ஒன்றுதான். அதை சமமாக நடத்த வேண்டும்.

ரஜினிகாந்த் எப்போ ரியாக்சன் செய்தாலும் தப்பு சொல்லும் கூட்டம் இருக்கிறது. 41 பேர் இறந்து போயிருக்காங்க. அவங்க ஆத்மா சாந்தி அடையட்டும் என்று அவர் சொல்றது என்ன தப்பு இருக்கு என்று இயக்குனர் பேரரசு ஆவேசமாக பேசியிருக்கிறார். இவர் நடுநிலையாக தவெக தலைவர் விஜய் தமிழக அரசு திமுக அமைச்சர்கள் என மூன்று தரப்பினரையும் பாரபட்சமின்றி விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்