- Advertisement -
இயக்குனர் பிரவீன் காந்தி ஒரு நேர்காணலில் கூறியதாவது, முதலில் ஐஸ்வர்யா ராயிடம் சொன்ன கதையை கால்ஷீட் தேதி தாமதமானதால் நடிகை சிம்ரனை வைத்து இயக்கத் தொடங்கினேன். பிரசாந்த் நடித்த அந்த படம்தான் ஜோடி. ஆனால் அதே போன்ற ஒரு கதையில் சூர்யா நடிப்பில் பூவெல்லாம் கேட்டுப்பார் படமும் தயாராகிக் கொண்டிருந்தது. இந்த 2 படங்களிலும் விஜயகுமார் மற்றும் நாசர் நடித்திருந்தது தற்செயலாக நடந்த அதிசய ஒற்றுமை தான். முதலில் அந்தப் படத்தை வெளியிட கொடுத்துவிட்டு 2 வாரம் கழித்து என்னுடைய ஜோடி படத்தை வெளியிட்டேன் என்று இயக்குனர் பிரவீன் காந்தி கூறியிருக்கிறார்.





