நடிகர் கார்த்தி பல சூப்பர் ஹிட் படங்களை தந்துள்ளார். அதில் மிக முக்கியமான படம் சர்தார். அந்த படத்தை இயக்கியவர் பிஎஸ் மித்ரன். இப்போது அவரது இயக்கத்தில் சர்தார் 2 படம் வெகு வேகமாக தயாராகி வருகிறது. நிறைய விமானங்களுடன் ஏர்போர்ட் செட் அமைத்து, ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிப்ரவரி இறுதிக்குள் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
சர்தார் 2 படப்பிடிப்பை முடித்த பிறகு நடிகர் கார்த்தி, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். அதற்குள் கூலி படத்தை முடித்துவிட்டு வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் அடுத்து கைதி 2 படப்பிடிப்பில் கார்த்தியுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளார். கூலி படத்தை முடித்துவிட்டு ரஜினியும் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.
இதற்கிடையே சர்தார் 2 படப்பிடிப்பை முடித்த பிறகு, அந்த படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரன், இரும்புத்திரை படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டில் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் தயாரித்த இரும்புத்திரை படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வெற்றிப் படமாகும்.
நடிகர் விஷால் நாயகனாகவும், ஆக்சன்கிங் அர்ஜூன் வில்லனாகவும் நடித்த இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் பரிவர்த்தனை ஏமாற்றுதல் போன்ற விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம், இன்றைய டிஜிட்டல் உலகில் மக்களை ஏமாற்றும் மோசடிகள் குறித்த பல விஷயங்களை அம்பலப்படுத்திய சூப்பர் படமாக இருந்தது.
இரும்புத்திரை படத்தை இப்போதைய சூழலில் 7 ஆண்டுகள் ஆன நிலையில் ரி ரிலீஸ் செய்தால் கூட அந்த படம் கில்லி படம் போல பெரிய அளவில் கலெக்சன் அள்ளும் அளவுக்கு அந்த படம் இப்போதைய காலகட்டத்துக்கும் ஏற்ற படமாக உள்ளது. அப்படிப்பட்ட சமூக பிரச்னைகளை மையப்படுத்தி ஆன்லைன் டிஜிட்டல் மோசடிகளை அம்பலப்படுத்திய ஒரு படமாக இருந்தது.
அதனால் இப்போது சர்தார் 2 படத்துக்கு பிறகு இரும்புத்திரை 2ம் பாகம் படத்தை இயக்க இயக்குனர் பிஎஸ் மித்ரன் ஆயத்தமாகி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஷாலும் ஆர்வமாக உள்ளார். மீண்டும் வில்லன் கேரக்டரில் அர்ஜூன் நடிப்பாரா அல்லது வேறு நடிகர் நடிப்பாரா என்பது இன்னும் முடிவாகவில்லை. எனினும் இரும்புத்திரை 2 உருவானால் விஷாலுக்கு அது ஒரு கம்பேக் படமாக இருக்கும்.





