இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி எஸ்ஜே சூர்யா மாளவிகா மோகனன் ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்த படம் சர்தார் 2. சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் நேற்று வெளியானது.
இந்நிலையில் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ ஒன்றில் சர்தார் 2 படம் குறித்து கூறியிருப்பதாவது, இந்த படத்தின் கதையை பற்றி பார்த்தோம் என்றால் டோக்கு என்ற பயாலாஜிக்கல் ஆயுதம் ஒன்று இருக்கும். அதை மனிதர்கள் மீது வில்லன் ஏவி பெரிய நாச வேலையை செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
அதை தடுப்பதற்கு சர்தார் களத்தில் இறங்குகிறார். அதற்குபிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை .படம் மொத்தம் மூன்று மணி நேரம் போகிறது. கொஞ்சம் கதையை வைத்துக்கொண்டு அதை மூன்று மணி நேரம் இழுத்து வைத்திருக்கிறார்கள். லாஜிக் செண்டிமெண்ட் எமோஷன் என எதுவுமே படத்தில் இல்லை.
முதல் பாதியாவது பரவாயில்லை. இரண்டாவது பாதியெல்லாம் ரொம்பவே இழுத்து விட்டார்கள். படத்திலேயே ஆறுதலான விஷயம் என்னவென்றால் எஸ்ஜே சூர்யா கேரக்டர் தான். அவர் முடிந்த அளவுக்கு படத்தை காப்பாற்றி இருந்தார். அதுவே கூட ஆரம்பத்தில் நன்றாக இருந்தது. ஆனால் போகப்போக அதுவும் சலிக்கத் தொடங்கிவிட்டது.
அந்த கேரக்டரும் வலுவாக எழுதப்படாததால் படம் சப்பு என்று ஆகிவிட்டது. பிராய்லர் கோழி எல்லாம் சாப்பிடுகிறீர்கள். அதனால் தான் கொல்கிறேன் என்று வில்லன் சொல்கிறார். பிராய்லர் கோழியை சாப்பிடாமல் உயிர் வாழ வேண்டும் என்றால் நாங்களே தற்கொலை செய்து கொள்கிறோம் அல்லது நீ கொன்றுவிடு என்று சொன்ன பிறகும் அவர் முக்கால் மணி நேரம் நம்மை கொன்றுவிட்டார்.
படம் டெக்னிக்கலாக ஸ்ட்ராங்கான படம் தான். பார்ட் ஒன்றே சுமாரான படம் தான். அதைவிட இப்போது சுமாரான படத்தை எடுத்து வைத்திருக்கிறார். இதிலாவது முதல் பாதி பரவாயில்லை. இரண்டாவது பாதியெல்லாம் எப்போடா படம் முடியும் என்று தோன்றி விட்டது. அதற்குப் பிறகு இந்த படத்தை தியேட்டருக்கு போய் பார்ப்பது உங்கள் இஷ்டம் என்று ப்ளு சட்டை மாறன் தனது வீடியோவில் கூறியிருக்கிறார்.





