- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகரை தொடர்ந்து அவரது மகன் நடிப்பு குறித்தும் கடும் விமர்சனம் செய்த இயக்குனர் ராஜகுமாரன்...

பிரபல நடிகரை தொடர்ந்து அவரது மகன் நடிப்பு குறித்தும் கடும் விமர்சனம் செய்த இயக்குனர் ராஜகுமாரன் – தேவயானி வீட்டுக்காரர் கொஞ்சம் ஓவராக தான் போறாரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் விக்ரமன். அவரிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தவர் ராஜகுமாரன். பிறகு அவர் நீ வருவாய் என என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்தில் பார்த்திபன் தேவயானி அஜீத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றியை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும் திருமதி தமிழ் காதலுடன் போன்ற படங்களை ராஜகுமாரன் இயக்கினார். ஆனால் முதல் படத்தை தவிர அடுத்து அவர் இயக்கிய 3 படங்களுமே மிகப்பெரிய தோல்வி படங்களாக இருந்தது. அவர் இயக்கிய 4 படங்களிலுமே தேவயானிதான் நாயகியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதற்கிடையே விண்ணுக்கும் மண்ணுக்கும் படப்பிடிப்பின் போது படத்தின் நாயகி நடிகை தேவயானிக்கும் இயக்குனர் ராஜகுமாரனுக்கும் இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமீப காலமாக இயக்குனர் ராஜகுமாரன் சில யூடியபூப் சேனல்களில் பங்கேற்று பேசி வருகிறார். ஆனால் அவர் தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேசாமல் நடிகர்கள் இயக்குனர்கள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார்.

குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் குறித்து பேசும் போது, அவர் நடித்த ஒரு சில படங்களை தவிர பெரும்பாலான படங்களில் நடிகர் கமல்ஹாசன் தான் தெரிவாரே தவிர அவர் நடித்த கேரக்டர் தெரியாது என்று கூறியிருந்தார். அதேபோல் 100 படங்களை இயக்கிய இராமநாராயணனை ரசிகர்கள் கொண்டாடவில்லை ஆனால் 6 படங்களை தந்த மகேந்திரனை ரசிகர்கள் இன்றும் சிலாகித்து பாராட்டி வருகின்றனர் என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

- Advertisement -

மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் படம் பார்த்தேன். அந்த படம் ரொம்பவும் சுமாரான படம்தான். அந்த படத்தில் அப்படி ஒன்றும் இல்லை என்று கூறியிருந்தார். தொடர்ந்து நடிகர் விக்ரம் குறித்து பேசிய ராஜகுமாரன், நடிகர் விக்ரமுக்கு மேக்கப் போட்டால் மட்டுமே நடிக்க வரும். அவரால் சாதாரண தோற்றத்தில் நல்ல நடிப்பை தர முடியாது. சாமி படத்தில் ரஜினி மற்றும் கமல்ஹாசனை பிரதிபலித்து நடித்திருந்தார் என்றும் கூறியிருந்தார்.

தற்போது ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன், நடிகர் விக்ரம் மகன் நடிப்பு குறித்தும் கடுமையாக விமர்சித்திருக்கிறார். விக்ரம் மகன் துருவ் எத்தனை படம் வேண்டுமானாலும் நடிக்கட்டும். ஆனால் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் மாதிரி ஒரு படம் நடித்தால் தான் மக்கள்கிட்ட அவர் ஒரு ஹீரோவாக போய் சேர முடியும். சினிமா நிறைய மாயாஜாலம் அடங்கிய ஒரு அற்புதமான விஷயம். அதற்கு நிறைய அடிப்படை விஷயங்கள் இருக்கிறது. முதலில் சினிமா என்றால் என்னான்னு அவர் புரிஞ்சுக்கணும் என்று பேசி இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்