- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் மகனும், என்னோட மகளும் ஜோடியா அந்த படத்தோட 2ம் பாகத்துல நடிக்க போறாங்க…...

நடிகர் விஜய் மகனும், என்னோட மகளும் ஜோடியா அந்த படத்தோட 2ம் பாகத்துல நடிக்க போறாங்க… – இயக்குனர் ராஜகுமாரன் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

இயக்குனர் விக்ரமன் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன். பார்த்திபன் தேவயானி நடித்த நீ வருவாய் என என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக ராஜகுமாரன் அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பை வெற்றியை பெற்றது.

அடுத்து அவர் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் திருமதி தமிழ் காதலன் போன்ற படங்களிலும் தேவயானியே கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் நீ வருவாய் என படம் ஒன்றைத் தவிர மற்ற மூன்று படங்களுமே ராஜகுமாரனுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதற்கிடையே தேவயானியை ராஜகுமாரன் திருமணமும் செய்துக்கொண்டார்.

- Advertisement -

இதையடுத்து இயக்குனர் ராஜகுமாரன் சில படங்களில் நடித்தார். குறிப்பாக நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ரயிலில் ஒரு காமெடி காட்சியில் ராஜகுமாரன் நடித்திருந்தது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தொடர்ந்து காமெடி நடிகராக வலம் வருவார் என்று எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் கடுகு என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் ராஜகுமாரன் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் சமீப காலமாக அவர் நிறைய நேர்காணவில் பங்கேற்று தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேசி வருகிறார். இதற்கிடையே நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் நடிக்கும் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, நான் இயக்கிய நீ வருவாய் என படத்தில் பார்த்திபன் தேவயானி நடித்திருந்தனர். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் அஜீத்குமாரும் நடித்திருந்தார். ஆனால் இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் விஜய் தான். ஆனால் ஒரு சில காரணங்களால் நீ வருவாய் என படத்தில் விஜயால் நடிக்காமல் போய்விட்டது.

ஆனாலும் அஜீத்குமார் அந்த கேரக்டரில் நடித்து படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்போது நான் நீ வருவாய் என படத்தின் 2ம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். இதில் என்னுடைய மகளை கதாநாயகியாகவும் நடிகர் விஜய் மகன் சஞ்சயை ஹீரோவாகும் நடிக்க வைக்க விரும்புகிறேன் என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

- Advertisement -

சற்று முன்