நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். குறைந்தபட்சம் இன்னும் 20 25 ஆண்டுகளுக்கு மேல் அவர் சினிமாவில் நீடித்திருப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜய், ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு முற்றிலும் விலகும் முடிவை ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இப்போது பிரபல தெலுங்கு பட இயக்குனர் ராஜமவுலியும் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். இந்திய சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒரு அற்புத படைப்பாக பாகுபலி படத்தை இயக்கி ரசிகர்களுக்கு கொடுத்தார். பாகுபலி பாகுபலி 2 என இரண்டு படங்களுமே இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பான் இந்தியா படங்களாகும்.
ராம் சரண் நடித்த மாவீரன், நானி நடித்த நான் ஈ இரத்தம் இரணம் இரவுத்திரம் (ஆர்ஆர்ஆர்) பாகுபலி 1 பாகுபலி 2 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜமவுலி. இப்போது நடிகர் மகேஷ் பாபு நடிகை பிரியங்கா சோப்ரா நடிப்பில் எஸ்எஸ்எம்பி 29 என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டில் வெளியாக வாய்ப்புள்ளது.
இந்த படங்களை தொடர்ந்த இயக்குனர் ராஜமவுலி மிக பிரம்மாண்டமான ஒரு படைப்பாக மகாபாரதம் கதையை சினிமாவாக எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படம் வரும் 2027ம் ஆண்டில் துவங்கி வருகிற 2030ம் ஆண்டில் திரைக்கு வர இருக்கிறது. மிக பிரமாண்டமான மேக்கிங்கில் மகாபாரதம் படத்தை இயக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் மற்றொரு முக்கிய முடிவையும் அவர் எடுத்திருக்கிறார். அதாவது மகாபாரதம் படத்தை எடுத்து முடித்த பிறகு சினிமாவில் இருந்து முற்றிலும் விலகும் முடிவுதான் அது. அதன்பிறகு படங்களை இயக்குவதில் இருந்து விலகி விட இயக்குனர் ராஜமவுலி முடிவு செய்திருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
சினிமாவை பொருத்த வரை ஒரு பிரமாண்ட இயக்குனராக அவர் பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து விட்டார். அதுவும் மகாபாரதம் படத்தை அவர் மிக நேர்த்தியாக எடுத்து முடித்து அந்த படத்துக்கு கிடைக்கும் அபார வரவேற்புடன் ரசிகர்களிடம் இருந்து விடைபெற ஆசைப்படுகிறார். 20230ம் ஆண்டுடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு இளைஞர்களுக்கு வழிவிட தயாராகி விட்டார் இயக்குனர் ராஜமவுலி.





