- Advertisement -
தெலுங்கில் உருவான பாகுபலி பாகுபலி 2 ஆர்ஆர்ஆர் படங்களை பான் இந்தியா படங்களாக தந்து இந்திய அளவில் தென்னிந்திய படங்களை பேச வைத்தவர் பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி. இப்போது அவர் வாரணாசி என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ராஜமௌலியிடம் ஹாலிவுட் பட வாய்ப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு நேரத்தில் ஒரு படத்துக்கு மட்டுமே கவனம் செலுத்துவேன். வாரணாசி படத்துக்கு பிறகு ஹாலிவுட் வாய்ப்புகள் குறித்து யோசிப்பேன் என்று கூறியிருக்கிறார்.





