நடிகர் சூர்யா, தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அவர் நடித்துவரும் கங்குவா படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. முழுநேர ஆக்சன் படமான இதில் சண்டை காட்சிகள் பிரமிக்க வைக்கும் என்று பேசப்படுகிறது. மறைந்த கலை இயக்குநர் மிலனுக்கு இந்த படம் தேசிய விருது பெற்றுத் தர வாய்ப்புள்ளதாம்.
இந்த படத்தை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா புறநானூறு என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். சூரரைப் போற்று என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை சூர்யாவுக்கு தந்தவர் சுதா கொங்கரா என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த படமும் சூர்யா கேரியரில் முக்கிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த 25வது படமாக, ஜப்பான் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் குறித்து 2 ஆண்டுகளுக்கு முன்பே, படத்தின் இயக்குநர் ராஜூ முருகன், கார்த்தியிடம் கதை சொல்லி, கார்த்தியும் ஓகே சொல்லி விட்டார். ஆனால் பொன்னியின் செல்வன், சர்தார் படங்களுக்கு பிறகே ஜப்பான் படத்தில் நடித்தார். அதுவரை இயக்குநர் நீண்ட வெயிட்டிங்கில் இருந்தார்.
தம்பி கார்த்தியை போலவே, அண்ணன் சூர்யாவும் அப்படி ஒரு இயக்குநரை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார். அவர் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமார் தான். அதாவது இப்போது சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படத்தை இயக்கிய அதே இயக்குநர்தான்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு கதையை சூர்யாவிடம் சொல்ல அவருக்கு கதை மிகவும் பிடித்து போய்விட்டது. உடனே, ரவிக்குமாருக்கு இயக்குநர் சம்பளமாக ரூ. 50 லட்சம் அட்வான்ஸ் தரப்பட்டுள்ளது. ஆனால் அட்வான்ஸ் வாங்கி ஒன்றரை வருஷமாகியும் இன்னும் சூர்யா தரப்பில் இருந்து எந்த பாசிட்டிவ் ஆன பதிலும் இல்லாததால் ரவிக்குமார் பலத்த அதிருப்தியில் இருந்துள்ளார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்த நிலையில், அடுத்து சுதா கொங்கரா படத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆகி விட்டார். இன்னும் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டுமா என்ற மன உளைச்சலில் ரவிக்குமார் இருந்திருக்கிறார். ஏனெனில் அயலான் படம் முடிந்த நிலையில், வேறு படம் இல்லை என்ற நிலையில் வரும் 2024ல் ஜூலை மாதத்துக்கு பிறகு ரவிக்குமார் படத்துக்கு சூர்யா கால்ஷீட் தருவதாகவும், ஸ்டுடியோ கிரீன் ரவிக்குமாரின் படத்தை தயாரிக்கும் எனவும் தகவல் வந்துள்ளது.





