சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் திரை பிரபலங்கள் குறித்து பல காலமாக தொடர்ந்து பேசிவருகிறார். ஆனால் அவரது பேச்சு தொடர்ந்து நடிகர்,நடிகைகள் குறித்து அவதூறு பரப்புவதாக இருப்பதாக கருத்தும் எழுந்திருக்கிறது. இருந்தாலும் பயில்வான் ரங்கநாதன் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அதேபோல் பேசிவருகிறார்.
அவருக்கு நடிகை ரேகா நாயர், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகை ராதிகா, சாந்தனு உள்ளிட்டோர் கடும் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் நடிகை சினேகா குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோ பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அவர் பேசியிருக்கும் வீடியோவில், “நடிகை சினேகா பிரசன்னாவுக்கு முன்பே பிரபல தயாரிபாளர் ஒருவரை காதலித்தார். அவர் வேறு யாரும் இல்லை நாக் ரவிதான்.
இவர்களின் காதல் தீவிரமடைந்து திருமணம் செய்துகொள்ள இரண்டு பேரும் முடிவு செய்தார்கள். முதற்கட்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது இரண்டு பேருமே வைர மோதிரத்தை மாற்றிக்கொண்டார்கள். ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சினேகாவுக்கு ரவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் உண்மையாக இருக்கமாட்டார் என்று உணர்ந்துகொண்டார்.
இதனால் அந்த தயாரிப்பாளரை நிச்சயதார்த்தத்துடன் உதறிவிட்டார். அதன் பிறகு திருமணமே வேண்டாம் என்று இருந்த சினேகாவுக்கு பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டது.அதன் பிறகு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக மாறினார்கள்”என்றார். அவர் இப்படி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேபோல் நடிகை நயன்தாரா ஒருகாலத்தில் போதைக்கு அடிமையாகியிருந்தார் என்றும் அவரை விக்னேஷ் சிவன்தான் மாற்றினார் என்றும் பயில்வான் ஒரு வீடியோவில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் பேசுவதற்கு திரையுலக பிரபலங்கள் எந்த ரியாக்ஷனும் கொடுப்பதில்லை. மாறாக அவர் தொடர்ந்து இப்படி பேசிவருவதால் அவர் மீது ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுத்தால் என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கின்றனர்.





