மலையாள நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவான படம் டாக்ஸிக். கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கேஜிஎஃப் நாயகன் யஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். முன்னணி நட்சத்திர நடிகைகள் கியாரா அத்வானி நயன்தாரா ருக்மணி வசந்த் ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக படம் முழுவதும் வன்முறை காட்சிகளும் இரத்தம் தெறிக்கும் சண்டைகளுமே இருக்கின்றன. மேலும் இந்த படத்தில் ஆபாச காட்சிகள், முத்தக்காட்சிகள் படுக்கையறை காட்சிகளும் நிறைந்துள்ளன. இதனால் இது ஹை லெவல் பட்ஜெட் பிட்டு படம் என்றும் திரை விமர்சகர்கள் திட்டி விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில் காந்தாரா காந்தாரா சாப்டர் 1 படங்களை இயக்கி அதில் ஹீரோவாக நடித்த நடிகர் மற்றும் இயக்குனனர் ரிஷப் ஷெட்டி டாக்ஸிக் படம் குறித்து தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, பெரும்பாலான திரைப்படங்கள் பயணிக்கும் வழக்கமான பாதையில் இந்தப் படத்தின் கதையும் முக்கிய கதாபாத்திரங்களும் பயணிக்காமல் இருக்கலாம்.
அதனால் அந்தப் பாதை தவறானது என்று அர்த்தம் இல்லை. ஒரு கதையை உருவாக்குவதற்கு பின்னால் இருக்கும் உழைப்பும் மனதில் தோன்றிய ஒரு எண்ணம் திரைப்படமாக திரைவில் உருவாகும் வரையிலான பயணமும் மிகப் பெரியது. யாஷ் நடிப்பு மிகப் பிரமாதமாக உள்ளது.
யாஷ் ஒரு கதாபாத்திரத்துக்காகவும் அதற்கான உலகத்திற்காகவும் முழுமையாக அவரை அர்ப்பணித்த விதத்திற்கு தலை வணங்குகிறேன். மிகப்பெரிய அளவிலான நடிப்பை கோரும் இந்த கதாபாத்திரத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அவரது அர்ப்பணிப்பை என்னால் தெளிவாக உணர முடிகிறது.
குற்ற உணர்வு வாழ்க்கையில் எவ்வாறு நச்சு தன்மையை அதிகரிக்கிறது என்பதை உணர்த்துவது எளிதான காரியம் அல்ல. இப்படி ஒரு துணிச்சலான முயற்சியை மேற்கொண்டதற்காக நான் அவருடன் துணை நிற்கிறேன். கன்னட சினிமாவை உலக அரங்கத்துக்கு கொண்டு சென்ற அவரது அன்பிற்காக நாங்கள் நேசிக்கிறோம் என்று ரிஷப் ஷெட்டி அந்த பதிவில் டாக்ஸிக் படம் குறித்து கூறியிருக்கிறார்.





