நடிகர் திலகம் சிவாஜி கணேசனை போல நடிகர் கமல்ஹாசனை போல நாமும் பெயர் சொல்லும் விதமான அழுத்தமான கேரக்டர்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெயரும் புகழும் பெற வேண்டும் என்று நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் விரும்பியவர்தான் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் ஏவிஎம் தயாரிப்பில் முரட்டுக்காளை படம் அவருக்கு பெரிய வெற்றியை தந்த பிறகுதான் அவர் சூட்சுமத்தை புரிந்துக்கொண்டார்.
அதாவது நமக்கு பிடித்த மாதிரியான படங்களில் நடித்தார் ரசிகர்களிடம் வரவேற்பை வெற்றியை பெற முடியாது. ரசிகர்களுக்கு பிடித்தமான கேரக்டர்களில் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தால்தான் நாம் தொடர்ந்து சினிமாவில் ஜெயிக்க முடியும். நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை புரிந்துக்கொண்டார்.
அதன்பிறகு மசாலா படங்களின் நாயகனாக மாறி ஆக்சன் களத்தில் அதிரடி காட்டினார். இப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களின் பல்ஸ் என்ன என்பதை தெரிந்து வைத்திருக்கும் ரஜினி, ரசிகர்களின் விரும்பும் விதமான தனக்கான கதைகளை தேர்வு செய்து நடிப்பாரே தவிர இயக்குனர்கள் விரும்பும் கதைகளில் அவர் நடிக்கவே மாட்டார். அதுவே அவரது தாரக மந்திரம்.
எனினும் வேட்டையன் லால் சலாம் கூலி தர்பார் போன்ற படங்கள் சில நேரங்களில் ரஜினியையும் ஏமாற்றி விடக்கூடும். அந்த வகையில் இப்போது ரஜினிகாந்த் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். ரஜினியிடம் கதை சொல்லப் போகிறோம் என்று இல்லாமல் ரஜினிக்காக கதை சொல்லப் போகிறோம் என்கிற மனநிலையில் இயக்குனர்கள் கதைகளுடன் வர வேண்டும்.
மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் கருப்பு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி, சமீபத்தில் ரஜினிகாந்திடம் கதை சொல்ல அவரது போயஸ்கார்டன் வீட்டுக்கு சென்றிருக்கிறார். ரஜினியும் சோபாவில் அமர்ந்து அவரிடம் கதை கேட்டிருக்கிறார். அவர் கதை சொல்ல ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே இது எனக்கான கதை இல்லை என்பதை ரஜினி தெளிவாக புரிந்துக்கொண்டு விட்டார்.
ஆனால் அதை ஆர்ஜே பாலாஜியிடம் உடனே வெளிப்படுத்தாமல் அதுவும் இதுவும் பேசி மற்ற விஷயங்கள் குறித்து அரட்டையடித்து 2 மணி நேரம் வரை ஜாலியாக பேசிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், பிறகு பார்ப்போம் பாலாஜி என்று சொல்லி கைகுலுக்கி அனுப்பி விட்டார். அவருக்கு கதை பிடிக்காத போதும் அதை உடனே வெளிப்படுத்தாமல் மற்ற கதைகளை அரட்டையடித்து பேசி ஆர்ஜே பாலாஜியை மகிழ்ச்சியாக திருப்பி அனுப்பி இருக்கிறார் சூப்பர் ஸ்டார். இதுதான் அவரது ஸ்டைல் என்று பலரும் பாராட்டுகின்றனர்.





