- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் மோகனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை - அவரது இடத்தை பிடித்த மலையாள...

நடிகர் மோகனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பிரபல நடிகை – அவரது இடத்தை பிடித்த மலையாள நடிகை – இந்த கேப்புல இதெல்லாம் நடந்திருக்கா?

- Advertisement -

நடிகர் மோகன், தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையாக பேசப்பட்ட ஒரு நடிகர். இவரது படங்கள் என்றாலே, ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்புதான். மோகன் படத்தில் இடம்பெறும் பாடல்கள், தேனில் விழுந்த பலாச்சுளை போன்று தித்திப்பாக இருக்கும். இப்போதும், அந்த பாடல்கள் கேட்க கேட்க மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான பாடல்கள்தான்.

நடிகர் மோகன் இப்போது, வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில், வில்லனாக நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக, ஹரா என்ற படத்தில் மோகன் ஹீரோவாக நடித்த நிலையில் அந்த படம் தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக மலையாள நடிகை அனுமோல் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் சாருஹாசன், யோகி பாபு, வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, சுரேஷ் மேனன், மைம் கோபி, சாம்ஸ், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பள்ளிகளில், சட்டப் பிரிவுகள் குறித்து மாணவ, மாணவியர் தெரிந்துக்கொள்ளும் வகையில், கல்வித்திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பதே இந்த படத்தின் மையக்கரு என கூறப்படுகிறது.

இந்த படத்தில், முதலில் மோகனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை குஷ்பு. ஏற்கனவே அவர் நடிகர் மோகனுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது நிறைவேறவில்லை. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு குஷ்புவுடன் நடிக்கும் தனது ஆசை கனவு நிறைவேறி விட்டதாக மோகனும் கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால், திடீரென இந்த படத்தில் நடிக்க குஷ்பு மறுத்துவிட்டதால், அவருக்கு பதிலாக மலையாள நடிகை அனுமோல் நடித்துள்ளார். இதில் அனுமோல் கேரக்டர் மிக சிறப்பானது. முக்கியத்துவம் வாய்ந்த தனது கேரக்டரை உணர்ந்து, சிறப்பான பங்களிப்பை அவர் வழங்கி இருப்பதாக, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஷூட்டிங் வேளையில், படத்தின் இயக்குநர் விஜய்ஸ்ரீக்கு விபத்து ஏற்பட்டதால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததால் படப்பிடிப்பு தாமதமானது. இதற்கிடையே வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க மோகன் ஒப்பந்தமானார். இதனால், மீண்டும் படப்பிடிப்பை துவங்கிய போது, தேதிகள் சரியாக இல்லாததால், குஷ்புவுக்கு பதில் அனுமோல் இந்த படத்தில் நடித்தார் என்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்