தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படம் வெளியான 12 ஆண்டுகள் ஆன நிலையில், அவர் முதல் படத்தில் வாங்கிய சம்பளம் ரூ. 10 ஆயிரம். இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்கும் 1965 படத்தில் சம்பளம் ரூ. 75 கோடி என்று சொல்லப்படுகிறது.
இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் 22 படங்கள் வெளியாகி உள்ளன. இதில் டான் ஹீரோ மிஸ்டர் லோக்கல் பிரின்ஸ் அயலான் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் டாக்டர் மாவீரன் படங்கள் பெரிய கவனமும் வரவேற்பையும் பெற்றன. சமீபத்தில் தீபாவளிக்கு வெளியான அமரன் மாஸ் ஹிட் படமாக இருந்தது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ. 325 கோடி வசூலை குவித்துள்ளது.
அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு திருத்தணி திருச்செந்தூர் முருகன் கோவில்களுக்கு சென்றுள்ள சிவகார்த்திகேயன் அடுத்து திருப்பரங்குன்றம் பழனி என அறுபடை வீடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளதாக, திருச்செந்தூரில் கோவிலுக்கு வந்த போது நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, என்னை நேசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அதேபோல் என்னை வெறுப்பவர்களும் சிலர் இருக்கின்றனர். நான் சினிமாவில் என்ன செய்கிறேன் என்று அவர்கள் கேட்பார்கள். என்னுடைய வெற்றி அவர்களுக்கான பதிலடி கிடையாது. என்னுடைய வெற்றி என்னை நேசிக்கும் என் ரசிகர்களுக்குதான்.
சோஷியல் மீடியாவில் உள்ள குறிப்பிட்ட சில குரூப், என் படங்கள் தோல்வியடைந்தால் கடுமையான என்னை அடிப்பார்கள். அந்த படங்கள் வெற்றியடைந்து விட்டால் என்னை தவிர மற்றவர்களை பற்றி பாராட்டி பேசுவார்கள் என்று அந்த நேர்காணலில் சிவகார்த்திகேயன் பகிரங்கமாக பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





