- Advertisement -
Homeபொழுதுபோக்கு10 மனைவிகள் கூட கட்டிக்கொள்ளலாம்… ஆனால் அது ரொம்ப கஷ்டம் - நடிகை ரோஜாவின் கணவர்...

10 மனைவிகள் கூட கட்டிக்கொள்ளலாம்… ஆனால் அது ரொம்ப கஷ்டம் – நடிகை ரோஜாவின் கணவர் இப்படி விவகாரமா பேசியிருக்கிறாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. ஆந்திராவை சேர்ந்தவர். விஜயலட்சுமி என்ற இவரை ரோஜா என பெயர் மாற்றியவர் இயக்குனர் ஆர் கே செல்வமணி. செம்பருத்தி படத்தில் ரோஜாவை பிரசாந்துக்கு ஜோடியாக அறிமுகம் செய்தார். ரோஜா தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக மாறினார்.

உழைப்பாளி வீரா தமிழ்செல்வன் ஏழையின் சிரிப்பில் இந்து பரம்பரை ஆயுதபூஜை உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் கந்தா கடம்பா கதிர்வேலா மக்களாட்சி சூரியன் ராசய்யா லூட்டி பொட்டு அம்மன் சுயம்வரம் என பல படங்களில் ரோஜா நடித்திருக்கிறார். அவரது பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாகவும் இருந்தன.

- Advertisement -

இந்நிலையில் ஆந்திராவில் அரசியலில் ஈடுபட்ட நடிகை ரோஜா, ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் முதலில் எம்எல்ஏ ஆகி பிறகு விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் ரோஜா பதவி வகித்தார். இப்போது ஆட்சி மாறிய நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா நிகழ்ச்சிகளில் அதிகமாக ரோஜா கலந்துக்கொண்டு இருக்கிறார்.

தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணியை, நடிகை ரோஜா பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கின்றனர். இயக்குனர் ஆர்கே செல்வமணி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இப்போது பெப்சி அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இயக்குனர் எழில் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான சூப்பர் ஹிட் படம் தேசிங்குராஜா. இப்போது இந்த படத்தின் 2ம் பாகம் தேசிங்குராஜா 2 உருவாகியுள்ளது. வருகிற 11ம் தேதி தேசிங்கு ராஜா 2 ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பெப்சி தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி கலந்து கொண்டார்.

அப்போது விழாவில் அவர் பேசியதாவது, 10 மனைவிகள் கூட கட்டிக் கொள்ளலாம். ஆனால் காமெடி படம் எடுப்பது ரொம்ப கஷ்டம். என் படத்தில் காமெடி காட்சிகளே இருக்காது. ஆனால் எனக்கு காமெடி படம்தான் பிடிக்கும். இந்த படத்தில் எழில் 10 இயக்குனர்களை நடிக்க வைத்துள்ளார். அடுத்த படத்தில் 10 தயாரிப்பாளர்களை எழில் நடிக்க வைக்க வேண்டும். எழில் படங்களின் காமெடியை 100 தடவை பார்த்திருப்பேன். மக்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ அதை கொடுப்பவர் இயக்குனர் எழில் என்று இயக்குனர் ஆர்.கே செல்வமணி அந்த விழாவில் பேசியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்