- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்டில் அஜீத், சூர்யாவுடன் மோதுவது அந்த ஹீரோவா? போடு வெடிய -...

தீபாவளி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்டில் அஜீத், சூர்யாவுடன் மோதுவது அந்த ஹீரோவா? போடு வெடிய – உண்மையிலேயே பட்டாசு கௌப்ப போகுது!

- Advertisement -

தீபாவளி என்றாலே கங்கா ஸ்நானம், புத்தாடை அணிதல், பட்டாசு வெடித்தல், கறிவிருந்து, இனிப்பு பலகாரம், புது ரிலீஸ் சினிமா பார்த்தல் என்பதுதான் 30, 40 ஆண்டுகளுக்கு முன் எழுதப்படாத தீபாவளி பண்டிகை சட்டமாக இருந்தது. தீபாவளி ரிலீஸ் படங்களை காண, தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

அதனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முக்கிய ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்கள், கண்டிப்பா தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி விடும். கடந்த 1980, 90களில் ரிலீசான பல முக்கிய ஸ்டார்களின் படங்கள் பலவும், தீபாவளி அல்லது பொங்கல் ரிலீஸ் படங்களாக தான் இருக்கும். ஏனெனில் தியேட்டர்களில் பண்டிகை கால கூட்டம் ஒரு வாரம், 10 நாட்களுக்கு மேல் நீடிக்கும்.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, எல்லா காலகட்டங்களிலும் சினிமா பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் பெருகி விட்டதால், நடிகர்களின் கால்ஷீட்டுகளை பொறுத்து படங்களின் ரிலீஸ் தேதிகள் மாற்றப்பட்டு விட்டன. அதனால் பண்டிகை காலத்தை பெரிதாக குறி வைக்காமல், இடைப்பட்ட நாட்களிலேயே பல முக்கிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

எனினும், சுந்தர் சி, பாண்டிராஜ் போன்ற ஒரு சிலர் மட்டும் இன்னும் பண்டிகை கால படங்களாக தங்களது படங்களை ரிலீஸ் செய்ய விரும்புகின்றனர். அதற்கு காரணம், நிறைய நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி படங்களாக, குடும்ப படங்களாக அவை இருப்பதால், பண்டிகை காலத்தில் குடும்பம் குடும்பமாக வரும் ரசிகர்களால் தங்களது படங்களுக்கு அதிக வரவேற்பும், ஆதரவும், வசூலும் கிடைக்கும் என்பதுதான்.

- Advertisement -

இந்நிலையில் வருகிற தீபாவளி பண்டிகைக்கு முதலில் 4 படங்கள் ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் தெரிவித்தன. நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி, நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கிய கங்குவா, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கிய எல்ஐசி, அடுத்து கவின் நடித்த கிஸ் ஆகிய 4 படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் என்று உறுதியாக கூறப்பட்டது.

இந்த 4 படங்கள் மட்டுமின்றி, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை 2 படமும், தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுதலை 2 படத்தை இயக்கி வரும் இயக்குனர் வெற்றிமாறனிடம், படத்தின் தயாரிப்பாளர் தீபாவளிக்கு விடுதலை 2 படம் ரிலீஸ் செய்வது குறித்து பேசியதாகவும், அதற்கு அவர் சம்மதித்திருப்பதாகவும் தெரிகிறது. கருடன் படம் வசூலில் பட்டைய கிளப்பிய நிலையில் தீபாவளி ரிலீஸில் அஜீத், சூர்யா படங்களுடன் சூரி நடித்த விடுதலை 2 படம் மோதுவது, ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்