- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் காலில் விழுந்த இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், காரணம் என்ன தெரியுமா? - விஜய்க்கு அட்வைஸ்...

ரஜினிகாந்த் காலில் விழுந்த இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், காரணம் என்ன தெரியுமா? – விஜய்க்கு அட்வைஸ் பண்ணுங்க என்றும் கூறியிருக்கிறாரே?

- Advertisement -

ஆரம்பத்தில் நடிகர் ரஜினியை திரையில் பார்த்து பார்த்து அதில் ஏற்பட்ட ஆர்வத்தால் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டவர் தான் நடிகர் விஜய். ரஜினிகாந்த் நடித்த நான் சிவப்பு மனிதன் படத்தை இயக்கியவர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர்தான். இந்த படத்தில் ரஜினியுடன் நடிகர் கே பாக்யராஜூம் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அன்று முதல் ரஜினிக்கும் எஸ்ஏசிக்கும் நெருங்கிய நட்பு நீடிக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, அன்று முதல் இன்று வரை ரஜினிக்கும் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகருக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்கள் என்று இருதரப்புக்கும் இப்போது சண்டை போட்டு கொண்டிருந்தாலும் கூட எஸ்ஏசி மிகவும் மதிக்கும் ஒருவராக ரஜினி இருக்கிறார்.

- Advertisement -

ஒருமுறை ஒரு விழாவில் பங்கேற்ற இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் ரஜினி காலில் விழுந்துவிட்டார். இதுபற்றி நான் ஒருமுறை நான் எஸ்ஏசியிடமே கேட்டேன். உங்க வயசு என்ன? ரஜினி வயசு என்ன? நீங்க போய் அவர் காலில் விழுந்தால் விஜய் ரசிகர்கள் எல்லாம் மனம் கஷ்டப்பட மாட்டார்களா என்று கேட்டேன்.

அப்போது எஸ்ஏசி, அவர் என்னுடைய ஆன்மிக குரு. ஆன்மிகம் சார்ந்த பல விஷயங்களை நான் ரஜினியிடம் இருந்து கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஆன்மிகம் சார்ந்த நிறைய விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார். தியானம் ஆன்மிகம் எந்தெந்த கோவில்களுக்கு போக வேண்டும் என்பதை பற்றி எல்லாம் அவர் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

- Advertisement -

அந்த வகையில் ஒரு ஆன்மிக குருவாக நினைத்துதான் நான் அவரது காலில் விழுந்தேன் என்று அப்போது கூறினார். அதனால் ரஜினிக்கும் எஸ்ஏசிக்கும் அப்படி ஒரு நெருக்கமான நட்பு இருந்ததால் தான் சின்ன வயதில் ரஜினியிடம் கூட்டிப் போய் விஜயை அறிமுகப்படுத்தினார்.

விஜய் ஒருகட்டத்தில் நடித்தே தீர வேண்டும் என்று இருந்த போது ரஜினியிடம் விஜயை அழைத்துப் போய், இந்த பையனுக்கு அட்வைஸ் பண்ணுங்க. பேசாமல் படிக்க சொல்லுங்க, சினிமாவில் நடித்தே தீர வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறான். சினிமா எல்லாம் வேண்டாம். படிக்க சொல்லுங்க என்றெல்லாம் எஸ்ஏசி ரஜினியிடம் பேசியிருக்கிறார். இதெல்லாம் ஆரம்ப காலத்தில் நடந்திருக்கிறது என்று அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்