- Advertisement -
Homeபொழுதுபோக்குமன்சூர் அலிகான் இனமானமிக்க தமிழன்.. மோசமானவர் இல்லை.. சப்போர்ட்டுக்கு வரும் சீமான்.. இது என்ன புது...

மன்சூர் அலிகான் இனமானமிக்க தமிழன்.. மோசமானவர் இல்லை.. சப்போர்ட்டுக்கு வரும் சீமான்.. இது என்ன புது கூத்து?

- Advertisement -

கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே தனது நடிப்பால் அப்ளாஸை அள்ளியவர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் அள்ளினார். அதன்படி 90களில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வந்தார் அவர். தொடர்ந்து பல படங்களில் நடித்த மன்சூர் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இருந்தாலும் அரசியலில் களம் குதிக்கவும் செய்தார்.

சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருந்தார் அவர். இருதய டிசோசா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவருக்கு பலரும் தங்களது நல்ல ரெஸ்பான்ஸையே கொடுத்தனர். எனவே இனியும் லோகேஷ் இயக்கும் படங்களில் மன்சூர் அலிகானுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் அமைந்தது. ஆனால் தற்போது அவரே அதில் மண்ணை அள்ளி போட்டுக்கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் த்ரிஷா பற்றி ஆபாசமாக பேசினார். அவரது இந்தப் பேச்சுக்கு த்ரிஷா மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தினர், தெலுங்கு திரையுலகில் இருந்து சிரஞ்சீவி ஆகியோர் கண்டன குரல்களை எழுப்பியிருக்கின்றனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கமும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது.

ஆனால் மன்சூர் அலிகானோ தன்னுடைய பேச்சில் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்து மன்னிப்பு கேட்காமல் இன்னமும் முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறார். அவரது இந்த அலட்சிய போக்கும் பலரை கொந்தளிப்பில் வைத்திருக்கிறது. இதற்கிடையே சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “மன்சூர் அலிகான் இனமானமிக்க, உணர்வுமிக்க ஒரு தமிழன். அவரை பற்றி வரும் செய்தியை பார்க்கும்போது மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் எந்தக் கருத்தையும் என்னால் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை.

ஆனால் ஒன்று அவர் மோசமானவரும் இல்லை யார் மனதையும் காயப்படுத்தக்கூடியவரும் இல்லை. அவர் வேடிக்கையாக பேசக்கூடியவர் என்பதால் அப்படி பேசியிருப்பார். அவர் ஒரு வருத்தமாவது தெரிவித்து இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளியை வைத்திருக்கலாம். இருந்தாலும் இந்த விஷயத்தை இவ்வளவு பெரிய விஷமாக மாற்ற வேண்டுமா என்ற எண்ணமும் எனக்கு தோன்றுகிறது” என்றார். இதற்கிடையே மன்சூர் அலிகான் சில காலம் சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

- Advertisement -

சற்று முன்