- Advertisement -
Homeபொழுதுபோக்குதுருவ நட்சத்திரம் படத்திலிருந்து முக்கிய அறிவிப்பு... இப்போதைக்கு இது போதும் என ஆனந்த கண்ணீர் வடிக்கும்...

துருவ நட்சத்திரம் படத்திலிருந்து முக்கிய அறிவிப்பு… இப்போதைக்கு இது போதும் என ஆனந்த கண்ணீர் வடிக்கும் விக்ரம் ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனது பன்முகத் திறமையான நடிப்பால் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் விக்ரம். ஆரம்ப கட்டத்தில் பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு முழுமையான வெற்றி கிடைக்காமல் சினிமாவில் போராடிய விக்ரமுக்கு, திருப்புமுனையாக அமைந்தது பாலாவின் சேது திரைப்படம். இதன் பிறகு அதிர்ஷ்ட காற்று விக்ரம் பக்கம் அடிக்க, தில், தூள், சாமி, அருள் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து மக்களால் சீயான் என்று செல்லமாக அழைக்கப்பட்டார். இதற்கு நடுவில் காசி, அந்நியன் போன்ற சரியான கதை களத்தை தேர்வு செய்து தனது நடிப்புக்கும் தீனி போட்டுக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் சிவாஜி, கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக சிறந்த நடிகர் எனப் போற்றப்படும் விக்ரம், கடந்த சில ஆண்டுகளாக ஒரு ஹிட் படத்தை கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் அவர் நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை என்றாலும், சரியான இயக்குனரிடம் அவர் போய் சேராததால் படம் இரண்டு வாரங்களுக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் திரையரங்குகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்திற்கும் இதே நிலைமைதான். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டும் நடிகருக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கலாம். இருப்பினும் அந்தப் படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் அது முழுக்க முழுக்க விக்ரம் படம் என்று கூற முடியாது.

- Advertisement -

இந்த நிலையில்தான் தனது நடிப்பிற்கு ஏற்றார் போல் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் சியான் விக்ரம். பலரும் எதிர்பார்த்தபடி பா ரஞ்சித்திடம் போய் சேர்ந்த அவர், தங்கலான் படத்திற்காக பட்டையை கிளப்பி வருகிறார். சமீபத்தில் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலானிலிருந்து வெளியான ஒரு சிறிய முன்னோட்டமே இதற்கு சாட்சி என்று கூறலாம். ஜடை பின்னிய நீண்ட முடியுடன் ரத்தமும் சதையுமாக சீயான் விக்ரம் சண்டையிடும் காட்சிகள் தெறிக்க விட்டன.

கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பா ரஞ்சித் இந்த படத்தை இயக்கியுள்ளார். கர்நாடகாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, சமீபத்தில் மதுரையில் நிறைவு பெற்றது. வரும் டிசம்பர் மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில்,விக்ரம் ரசிகர்களின் பார்வை, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் மேல் விழுந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே தயாரான இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் பெட்டிக்குள் பூட்டிவைக்கப்பட்டது.

- Advertisement -

முதலில் சூர்யா நடிக்க இருந்து, பின்னர் அது நடக்காமல் போக துருவ நட்சத்திரத்திற்கான, நட்சத்திரம் சீயான்தான் என உறுதி செய்து அவருடன் ஷூட்டிங் கிளம்பினார் இயக்குனர் கவுதம் மேனன். உளவு பார்க்கும் அதிகாரியாக ஜான் எனும் கதாபாத்திரத்தில் செம ஸ்டைலிசாக விக்ரம் நடிக்க, வெளிநாடுகளில் பரபரப்பாக சூட்டிங் நடத்தப்பட்டது. ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் என ஏராளமானோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டீசர் பெரும் வரவேற்பு பெற்றது. சமீபத்தில் படத்தில் சிக்கல்கள் அனைத்தும் முடிவு பெற்றதாகவும், ஜூலை14 ஆம் தேதி படம் கண்டிப்பாக ரிலீசாகும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் சாட்டிலைட் உரிமை போன்ற பிரச்சனைகளால் படத்தின் வெளியீட்டு தேதி மீண்டும் தள்ளி போனது. இதனால் நொந்து போன விக்ரம் ரசிகர்கள், எப்போதுதான் துருவ நட்சத்திரத்தை பார்க்க முடியும் என இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கான பணிகள் தொடங்கிவிட்டது என்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தில் இரண்டாவது பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள விக்ரம் ரசிகர்கள், படம் நிச்சயம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்