- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் விவாகரத்தா? தனது 2வது மனைவியை பிரியும் செல்வராகவன் - 6 மாதங்களுக்கு முன்பே சூசகமாக...

மீண்டும் விவாகரத்தா? தனது 2வது மனைவியை பிரியும் செல்வராகவன் – 6 மாதங்களுக்கு முன்பே சூசகமாக அவர் சொன்னது இதுதானா?

- Advertisement -

தமிழ் சினிமா இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். இவரது தம்பிதான் நடிகர் தனுஷ். காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி ஆயிரத்தில் ஒருவன் நானே வருவேன் புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் செல்வராகவன்.

சமீப காலமாக அவர் ராயன் மார்க் ஆண்டனி பகாசூரன் பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 7ஜி ரெயின்போ காலனி படத்தை செல்வராகவன் டைரக்ட் செய்த போது அந்த படத்தில் கதாநாயகியாக சோனியா அகர்வால் நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதலால் ஏற்பட்ட நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

- Advertisement -

ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே அவர்கள் திருமண வாழ்க்கை நீடித்த நிலையில் செல்வராகவனும் சோனியா அகர்வாலும் பிரிந்துவிட்டனர். சட்டப்படி இருவரும் விவாகரத்தும் பெற்று விட்டனர். அதன் பிறகு செல்வராகவன் 2வது திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி பெயர் கீதாஞ்சலி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் கீதாஞ்சலி தனது வலைதள பக்கத்தில் இருந்த செல்வராகவன் புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்திருக்கிறார் மேலும் அவருடன் இருந்த வீடியோக்கள் அனைத்தையும் அழித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் செல்வராகவன், உங்களை மிகவும் கோபப்படுத்தும் விஷயம் எது என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டிருந்தபோது, இதற்கான பதில் 6 மாதங்களில் தெரியவரும் என்று சூசகமாக பதில் அளித்து இருந்தார்.

- Advertisement -

இப்போது அவரது மனைவி கீதாஞ்சலி, செல்வராகவனின் புகைப்படங்களை வீடியோக்களை டெலீட் செய்திருப்பதன் மூலம் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் இருவரும் விரைவில் பிரிந்து போய் விவாகரத்து பெற வாய்ப்பு இருப்பதாகவும் இணையத்தில் தகவல் வேகமாக பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

ஏற்கனவே நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்து 2 பிள்ளைகளுடன் தனியாக இருந்து வருகிறார். இப்போது செல்வராகவனும் 3 பிள்ளைகள் உள்ள நிலையில், தனது மனைவியை பிரிவது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணன் தம்பி இருவருமே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக, இயக்குனர்களாக இருந்தும் அவர்களின் திருமண வாழ்க்கை இப்படி ஒரு மோசமான நிலையில் இருப்பது அவர்களது தந்தை கஸ்தூரிராஜா உள்ளிட்ட குடும்பத்தினரை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்