- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையனுடன் மோத மறுத்து பதுங்கிய கங்குவா, தானாக அமைந்த நல்ல வாய்ப்பை நழுவ விட்ட நடிகர்...

வேட்டையனுடன் மோத மறுத்து பதுங்கிய கங்குவா, தானாக அமைந்த நல்ல வாய்ப்பை நழுவ விட்ட நடிகர் சூர்யா – விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான படம் கங்குவா. இந்த படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் செய்வதாக முதலில் இருந்தது. ஆனால் அந்த நாளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் ரிலீஸ் ஆகும் என்பதால், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த அறிவிப்பை மெய்யழகன் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பகிரங்கமாக அறிவித்தார்.

தமிழ் சினிமாவின் அடையாளம், மூத்த நடிகர் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பதால், அந்த நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்த கங்குவா படத்தை வேறு ஒரு தேதிக்கு மாற்றி வைக்கிறோம் என்று நடிகர் சூர்யா அறிவித்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பலத்த ஏமாற்றத்தை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஏனெனில் நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த படங்கள் ஜெய் பீம் மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்கள்தான். அதற்கு பிறகு அவரது படங்கள் பெரிய அளவில் பேசும்படியாக அமையவில்லை. குறிப்பாக இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க வேண்டிய வணங்கான் படம் கைநழுவி போய்விட்டது. அதேபோல் இயக்குனர் சுதாகர் கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க வேண்டிய நிலையில் அந்தப் படத்திலும் நடிக்கும் வாய்ப்பை சூர்யாவும் இழந்தார்.

இரண்டு முக்கிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு இழந்த சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். இரண்டு பாகங்களாக வெளிவர உள்ள கங்குவா படத்தின் முதல் பாகம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளிவர இருந்தது. ஆனால் வேட்டையன் படத்துக்காக இந்த படத்தின் ரிலீஸ் தேதி வருகிற நவம்பர் 14ம் தேதி என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து இன்று வீடியோ ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறுகையில், கங்குவா மிகப்பெரிய படமாக துவக்கத்தில் இருந்தே பில்டப் செய்யப்பட்டு வருகிறது. உலகளவில் பேசப்படக்கூடிய ஒரு படமாக இருக்கும் என்றும் படக்குழு கூறி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு பெரிய படம், ரஜினி நடித்த வேட்டையன் படத்துடன் மோத முடியாமல் பின்வாங்கியது சரியல்ல.

வேட்டையன் படமும் கங்குவா படமும் ஒன்றாக வெளிவந்திருந்தால், ரஜினியை எதிர்த்து களத்தில் இறங்கிய தைரியமான நடிகர் சூர்யா என்ற பெருமை கிடைத்திருக்கும். ஒருவேளை கங்குவா படமும் வெற்றிப்படமாக ஓடியிருந்தால் ரஜினிக்கு போட்டியாக வந்து வெற்றி பெற்ற படம் என்ற பெருமையும் நடிகர் சூர்யாவுக்கு கிடைத்திருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை வெற்றிதான் முக்கியமே தவிர சீனியர், ஜூனியர் என்பதெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. அதனால் வேட்டையன் படத்துடன் கங்குவா படம் வெளியாகி இருக்க வேண்டும். ஒரு நல்ல வாய்ப்பை சூர்யாவே கெடுத்துக் கொண்டார் என்று அந்த வீடியோவில் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்