- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டார்களே? டிரெய்லர் பார்த்து கோபமடைந்த இயக்குனர் ஷங்கர் - என்ன கொடும...

இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டார்களே? டிரெய்லர் பார்த்து கோபமடைந்த இயக்குனர் ஷங்கர் – என்ன கொடும சார் இது?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். பல பிரமாண்டமான வெற்றி படங்களை கொடுத்தவர் ஷங்கர். ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. எனினும் அடுத்து இந்தியன் 3 படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக தருவதில் ஷங்கர் தீவிரம் காட்டி வருகிறார்.

தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தை டைரக்ட் செய்து வரும் இயக்குனர் ஷங்கர், இந்த படத்தை முடித்துவிட்டு இந்தியன் 3 படத்தை சிறப்பாக கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். டைரக்டர் ஷங்கரை பொருத்தவரை அவர் இயக்கும் படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

அதற்கு விதிவிலக்காக இந்தியன் 2 மட்டுமே ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்து விட்டது. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன், முதல்வன், இந்தியன், சிவாஜி, ரோபோ, ஜீன்ஸ் போன்ற பல படங்கள் தமிழ் சினிமாவின் அடையாளம் சொல்லும் படங்களாக அமைந்தன என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்தியன் 2 பலத்த ஏமாற்றம் தந்துவிட்டது. எனினும், அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியன் 3 படத்தை ஷங்கர் மிகப்பெரிய வெற்றி படமாக தருவதில் அதிக தீவிரம் கட்டி வருகிறார்.

இதற்கிடையே மதுரை எம்பி சு. வெங்கடேசன் எழுதிய வேல்பாரி என்ற சரித்திர நாவலை டைரக்டர் ஷங்கர் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். கேம் சேஞ்சர், இந்தியன் 3 படங்களை முடித்த பிறகு வேள்பாரி என்ற சரித்திர நாவலை படமாக்கும் திட்டத்தில் அவர் இருக்கிறார். இதற்காக அந்த நாவலை எழுதிய மதுரை எம் பி சு வெங்கடேசன் ஏற்கனவே ஷங்கர் அனுமதி பெற்று இருவரும் அதற்கான ஒப்பந்தமும் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் இருந்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் கோபமாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் நான் வாங்கி வைத்திருக்கும் வேள்பாரி நாவல் கதையிலிருந்து சிலர், சில காட்சிகளை திருடி படமாக்கி இருப்பதாகவும் அந்த காட்சிகளை சமீபத்தில் ரிலீசான ட்ரெய்லரின் பார்த்ததாகவும் குறிப்பிட்டு எச்சரித்து இருக்கிறார்.

அந்த பதிவில் இயக்குனர் ஷங்கர், எழுத்தாளர் சு வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி என்ற தமிழ் நாவலின் முக்கிய காட்சிகளை திருடி அனுமதியில்லாமல் பல படங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் ரிலீசான ட்ரெய்லர் ஒன்றில் நாவலின் முக்கிய காட்சி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். வேல்பாரி நாவலின் காட்சிகளை படங்கள், வெப் சீரிஸ் அல்லது எதிலும் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு இயக்குனர் ஷங்கர் அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்