- Advertisement -
Homeபொழுதுபோக்குபிள்ளையை பெத்தா கண்ணீரு, தனது மகள்களால் நிம்மதியை இழந்து வாடும் இயக்குனர் ஷங்கர், அடப்பாவமே

பிள்ளையை பெத்தா கண்ணீரு, தனது மகள்களால் நிம்மதியை இழந்து வாடும் இயக்குனர் ஷங்கர், அடப்பாவமே

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இந்திய சினிமாவின் மிக பிரம்மண்ட இயக்குனராக வலம் வருபவர். ஒரு 5 நிமிட காட்சியாக இருந்தாலும் கூட அதனை எந்தளவுக்கு பிரம்மாண்டமாக உருவாக்க முடியும் என்று யோசிப்பவர்தான் ஷங்கர். அவர் இயக்கிய முதல் திரைப்படமான “ஜென்டில்மேன்” திரைப்படத்திலேயே தனது பிரம்மாண்டம் என்ற முத்திரையை பதிக்க தொடங்கிவிட்டார் ஷங்கர்.

அதனை தொடர்ந்து “இந்தியன்”, “ஜீன்ஸ்’, “முதல்வன்”, “அந்நியன்” போன்ற மாஸ் ஹிட் திரைப்படங்களை இயக்கிய ஷங்கர், “எந்திரன்” திரைப்படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார்.

- Advertisement -

ஷங்கர் தற்போது “இந்தியன் 2”, “கேம் சேஞ்சர்” ஆகிய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த நிலையில் பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கந்தான் தனது வீடியோ ஒன்றில் ஷங்கர் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“ஒருவர் எதை விதைக்கிறாரோ அதையே அவர் அறுவடை செய்வார். ஷங்கர் படத்தில் ஒரு ஊசியாக இருந்தாலும் அது தங்க ஊசியாகத்தான் இருக்கும். ஷங்கர் இரண்டு மூன்று மடங்கு பட்ஜெட்டை உயர்த்தித்தான் படமே எடுப்பார். அவருடைய படத்தின் கதையை தயாரிப்பாளருக்கு முன் கூட்டியே சொல்ல மாட்டார். இது போல் ஷங்கர் செய்த பாவத்துக்குத்தான் அவரது மகள்களாலேயே அவர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். நிம்மதியாக ஒரு வாய் சோறு கூட சாப்பிட முடியாத நிலையில் ஷங்கர் தற்போது இருக்கிறார்.

- Advertisement -

தனது மூத்த மகளான ஐஸ்வர்யாவை கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கல்யாணம் செய்துகொடுத்தார். ஆனால் அவர் மீது பல பெண்கள் புகார் அளித்தனர். ஐஸ்வர்யாவும் தனது கணவருடன் வாழ முடியாது என்று வீட்டிற்கே திரும்ப வந்துவிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் கோர்ட் கேஸ் என்று அழைந்தார் ஷங்கர்.

தனது இரண்டாவது மகளான அதிதி ஷங்கரை டாக்டருக்கு படிக்க வைத்தார். ஆனால் அவரோ தனது தந்தையின் பேச்சை மீறி நடிக்க சென்றுவிட்டார். என்றைக்குமே ஒரு தந்தை தனது மகள் நடிகையாக ஆக வேண்டும் என விரும்பமாட்டார். இவ்வாறு தனது இரண்டு மகள்களால் ஷங்கர் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்” என்று அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்