- Advertisement -
Homeபொழுதுபோக்குபுகழ்பெற்ற நாவலை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருக்கும் இயக்குனர் ஷங்கர்... தமிழ் சினிமாவில் அடுத்த ஆயிரம்...

புகழ்பெற்ற நாவலை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருக்கும் இயக்குனர் ஷங்கர்… தமிழ் சினிமாவில் அடுத்த ஆயிரம் கோடி ரூபாய் வசூலுக்கான ப்ராஜெக்ட் ரெடி…

- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. கிட்டதட்ட இதன் படப்பிடிப்பு மட்டுமே ஐந்து ஆண்டுகள் காலம் நடைபெற்றது. ஏற்கனவே இந்தியன் படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால் இதனை பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அதனை இந்த திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை.

 

தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்னும் படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் கதையை தான் சங்கர் படமாக எடுத்துள்ளார். வெங்கடேஸ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜு இந்த திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.

 

மாவட்ட ஆட்சியருக்கும் அமைச்சருக்கும் இடையேயான மோதல் தான் இந்த திரைப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஜனவரி 10ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில், ராம் சரண் ரசிகர்கள் கேம் சேஞ்சர் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

 

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஷங்கர் நிறைய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், இந்தியன் படத்தின் மூன்றாம் பாகம் தொடர்பான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியான பிறகு, இந்தியன் 3 திரைப்படத்திற்கான பணிகளில் முழு வீச்சில் ஈடுபட உள்ளேன். எனக்கு பயோபிக் படம் எடுக்க எல்லாம் விருப்பமில்லை.

 

ஒருவேளை அப்படி ஆசை இருந்தால், ரஜினிகாந்த் சாரின் பயோபிக்கை எடுப்பேன். சமீப காலங்களில் வெளியான திரைப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. லப்பர் பந்து திரைப்படம் நன்றாக இருந்தது. அதன் இயக்குனர் தமிழரசனை எனக்கு பிடித்து போய்விட்டது. இதேபோல் மாரி செல்வராஜ், சித்தா இயக்குனர் அருண்குமார், மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன், தேசிங்கு பெரியசாமி ஆகியோர் படமும் நன்றாக உள்ளது.

 

என்னுடைய கனவு வேள்பாரி நாவலை திரைப்படமாக எடுப்பது தான். இதற்கு முன்பு நான் எந்த ஒரு வரலாற்று திரைப்படத்தையும் எடுத்ததில்லை. இதனால் எனக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும். இதனை மூன்று பாகங்களாக எடுக்கலாம் என்று இருக்கிறேன். அதுபோக ஒரு ஸ்பை திரில்லர் திரைப்படத்தையும் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். இந்த இரண்டு ப்ராஜெக்ட் களில் ஏதாவது ஒன்று எனது அடுத்த திரைப்படமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

சற்று முன்