- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்த மாதம், நெட்பிளிக்ஸ்சில் லியோ படம் ரிலீஸ், விஜய் ரசிகர்களுக்கு இப்படி சோதனை மேல் சோதனையா-...

அடுத்த மாதம், நெட்பிளிக்ஸ்சில் லியோ படம் ரிலீஸ், விஜய் ரசிகர்களுக்கு இப்படி சோதனை மேல் சோதனையா- இங்க என்ன சார் நடக்குது?

- Advertisement -

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் லியோ படம் வெளியாவதாக இன்று காலை அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 19ம் தேதி லியோ படம் ரிலீஸ் ஆன நிலையில், அதற்குள் அடுத்த மாதம் ஓடிடி தளத்தில் படம் வெளியாகிறது என்பது, விஜய் ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை தருவதாக உள்ளது. ஆனால் தகவல் உண்மை என்கின்றனர்.

விஜய் ரசிகர்களை பொருத்தவரை லியோ படம், மிகப்பெரிய வெற்றி படமாக பார்க்கப்படுகிறது. எப்படியும் ஜெயிலர் பட வசூலை, லியோ படம் முறியடிக்கும் என ஆர்வமாக உள்ளனர். இதுவரை 400 கோடி ரூபாய் வசூல் என்பதே, விஜய் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. இது விஜய்க்கான படம் என்று ரசிகர்கள், மகிழ்ச்சியாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

பொதுவாக புதிதாக ரிலீஸ் செய்யப்படும் படங்கள், 60 முதல் 90 நாட்களுக்கு பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியீடு செய்யப்படும். தியேட்டர்களில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் பட்சத்தில், இன்னும் ஓடிடி தளங்களில் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதுதான் வழக்கம்.

பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், மாதந்தோறும் இறுதியில் அடுத்த மாதம் வெளியிடப்பட்டுள்ள படங்களின் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நவம்பர் மாதத்தில், லியோ படம் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இன்று காலை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான லிஸ்ட்டில் அடுத்த மாதம் லியோ ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நடிகர் விஜய் நடித்த லியோ படம் அல்ல. லியோ என்கிற அனிமேஷன் படம். ராபர்ட் ஸ்மீகல், வாட்ச்டெய்ன்ஹெம் இயக்கிய ஆங்கில படமான இது பல்லி, ஆமை கேரக்டர்களை கொண்டு அனிமேஷனில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 21ல் இந்த லியோ வெளியாகிறது.

இந்த படத்தின் பெயரும் லியோ என்று உள்ளது. இந்த படத்தில் வரும் பல்லியின் பெயர்தான் லியோ. இந்த அறிவிப்பின் உண்மையை பின்பு தெரிந்துக்கொண்ட விஜய் ரசிகர்கள், நல்லா கௌப்புறாங்கப்பா பீதியை என, கிண்டலாக கூறி வருகின்றனர். லியோ படம் குறித்து இத்தனை வைப் நிலவிவரும் நிலையில், இந்த ஒரு வைப்பும் சேர்ந்து, ரசிகர்களை ஒரு கலக்கு கலக்கி விட்டது.

- Advertisement -

சற்று முன்