- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அப்படி மாறியதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்; வெளிப்படையாக பேசிய இயக்குனர் ஷங்கர் -...

நான் அப்படி மாறியதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்; வெளிப்படையாக பேசிய இயக்குனர் ஷங்கர் – அட இப்படி எல்லாம் கஷ்டப்பட்டாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். ஜெண்டில் மேன் படத்தில் துவங்கி அவர் இயக்கிய முதல்வன் அந்நியன் இந்தியன் எந்திரன் சிவாஜி பாய்ஸ் நண்பன் ரோபோ 2.0 என பல படங்களிலும் அவரது பிரமாண்டம் வேற லெவலில் இருந்து வருகிறது. அதனால் பிரமாண்ட இயக்குனர் என்ற பெயரும் ஷங்கருக்கு நிலைத்து விட்டது.

ஷங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு இந்தியன் 3 படம் வெளிவர இருக்கிறது. இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய 2 படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கியதால் ஏற்பட்ட குழப்பம்தான் இந்தியன் 2 தோல்விக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஆனால் இந்தியன் 2 தோல்விக்கு சரியான பதிலடியாக இந்தியன் 3 படம் மாஸ் ஹிட் படமாக வெளிவரப் போகிறது. அதற்காக இயக்குனர் ஷங்கரும், நடிகர் கமலும் இந்தியன் 3 படத்தில் பல மாற்றங்களை, திரைக்கதையில் முக்கிய திருத்தங்களை செய்திருக்கின்றனர். இன்னும் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.

இயக்குனர் ஷங்கர் ஆரம்பத்தில் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அவர் இயக்கிய சில படங்களில் ஓரிரு காட்சிகளில் ஷங்கர் நடித்திருப்பார். ஆனால் அது இயக்குனர் ஷங்கர்தானா என்று தெரியாத அளவுக்கு ஒல்லிக்குச்சி உருவத்தில் காணப்படுவார். அப்படி ஒரு சாதாரண உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பிரமாண்ட இயக்குனராக மாறியது குறித்து அவரே கூ;றியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஒரு நேர்காணலில் இயக்குனர் ஷங்கர் கூறியதாவது, ஒரே அறையில் எட்டு பேர் நாங்கள் இருப்போம். ஒரு ஹால், ஒரு கிச்சன் மட்டுமே அங்கு இருக்கும். அங்குதான் படுத்து தூங்கறது சாப்பிடறது எல்லாமே என்று இருப்போம். அப்படி இருக்கும்போது மனசு ஒரு விசாலாமான இடத்தில் இருக்க வேண்டும் என்று அடிக்கடி தோன்றும். ஒரு பொட்டிக்குள்ள இருக்கிறோம். அதில் இருந்து வெளியே வரணும் என்று அடிக்கடி தோன்றும்.

அதனால் என் அலுவலகத்தில் நிறைய இடம் இருக்கும். அறைகள் நடமாடும் பகுதிகளாக சற்று பெரிய அளவில் இருக்கும். மேலும் மிகவும் கஷ்டப்பட்டு வந்ததால் எல்லாம் பேண்டஸியாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கலாம் என்று இயக்குனர் ஷங்கர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்