- Advertisement -
Homeபொழுதுபோக்கு96க்கும் மெய்யழகனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது... கார்த்தி அரவிந்த்சாமி கதாபாத்திரங்களை இவர்களை மனதில் வைத்து தான்...

96க்கும் மெய்யழகனுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது… கார்த்தி அரவிந்த்சாமி கதாபாத்திரங்களை இவர்களை மனதில் வைத்து தான் எழுதினேன்… சர்ப்ரைஸ் கொடுக்கும் இயக்குனர்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு திரைப்படத்தை கொடுத்து அதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்று கொண்டாடப்பட்டவர் இயக்குனர் பிரேம்குமார். அப்படி அந்த ஒரே ஒரு திரைப்படம் வேறு ஒன்றும் அல்ல 96 தான். கோலிவுட் திரையுலகம் தொடங்கி எத்தனையோ காதல் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தாலும், அதில் 96 திரைப்படம் மட்டும் தனித்து காணப்பட்டு வருகிறது.

 

- Advertisement -

இதற்கு முக்கிய காரணம், அந்தத் திரைப்படத்தில் சொல்லப்பட்ட சொல்லப்படாத காதல் தான். பள்ளி கல்லூரி வாழ்க்கையை இங்கு பலரும் கடந்திருப்பார்கள். அதில், மேகமாய் மறைந்து போன காதல் பலருக்கும் நெஞ்சில் ஒரு ஓரம் மறைந்திருக்கும்.

 

- Advertisement -

அதனை இரண்டரை மணி நேர திரைப்படத்தின் மூலம் துளிர் விட்டு இறக்கை முளைக்க பறக்க செய்தவர் தான் பிரேம்குமார். 96 திரைப்படத்தின் வரும் காதல் காட்சிகளும் சரி, இசையும் சரி, திரிஷா மற்றும் விஜய் சேதுபதியின் உரையாடலும் சரி அதில் உள்ள உறவும் சரி அனைத்திலும் கண் கலங்க வைக்கும் உணர்ச்சியை நம்முடன் பிரேம்குமார் கடத்தி இருப்பார்.

 

இப்படி நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளச் செய்த அந்த இயக்குனர் அடுத்ததாக கார்த்தியை வைத்து மெய்யழகன் என்னும் திரைப்படத்தை எடுத்திருக்கிறார். 96 திரைப்படத்தைப் போல இந்த படமும் தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

 

இதில் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள். பீரியட் படமாக இது எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் கார்த்தி அரவிந்த் சாமியை பார்த்து அன்போடு அத்தான் அத்தான் என்று அழைப்பது பலரையும் கவர்ந்திருந்தது.

 

இந்த நிலையில் மெய்யழகன் திரைப்படம் குறித்து பல்வேறு சுவாரசியமான விஷயங்களை பிரேம்குமார் பகிர்ந்திருக்கிறார். இதனை நான் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று எண்ணிப் பார்க்கவே இல்லை. புத்தகத்தை வெளியிடுவதற்காக தான் இதற்கான கதையை எழுதினேன். இதில் கார்த்தி கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தையும் அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் கமல்ஹாசனையும் வைத்து அந்த புத்தகத்தை எழுதினேன். ஆனால் இது திரைக்கதையாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 96 திரைப்படத்தைப் போல இதுவும் ஒரே நாள் இரவில் உரையாடலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்