- Advertisement -
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் ஷங்கர், லைகா தயாரிப்பில் இயக்கிய இந்தியன் 2 படம் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் இந்தியன் 3 படம் 90 சதவீத படம் முடிந்த நிலையில் இன்னும் 10 முதல் 15 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கியுள்ளது. ஆனால் சண்டியர் படப்பிடிப்பில் பிஸியான நடிகர் கமல்ஹாசன், இந்தியன் 3 படப்பிடிப்புக்கு தேதி தராமல் இழுத்தடிக்கிறார். சமீபத்தில் சென்னை வந்த லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஷ்கரனை சந்திக்க இயக்குனர் ஷங்கர் முயற்சித்தும் அதுவும் நடக்கவில்லை. இந்த படத்தை திரைக்கு எப்படி கொண்டு வருவது என இயக்குனர் ஷங்கர் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





