- Advertisement -
Homeபொழுதுபோக்குஆண் இயக்குனருக்கு ஒரு சம்பளம்… பெண் இயக்குனர் என்றால் ஒரு சம்பளமா? - பராசக்தி பட...

ஆண் இயக்குனருக்கு ஒரு சம்பளம்… பெண் இயக்குனர் என்றால் ஒரு சம்பளமா? – பராசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா ஆவேசம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல மற்ற மொழி படங்களிலும் ஹீரோ நடிகா்களின் சம்பளம் என்பது நினைத்து பார்க்க முடியாத அளவுக்குதான் இருக்கிறது. குறிப்பாக தமிழில் ரஜினி கமல் அஜீத்குமார் போன்றவர்கள் 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர். நடிகர் விஜய் ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். மற்ற ஹீீரோ நடிகர்கள் ரூ. 30 கோடி முதல் ரூ. 75 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர்.

அதே போல் இயக்குனர்களின் சம்பளமும் சமீபகாலமாக மிக கணிசமாக உயர்ந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் நெல்சன் போன்றவர்கள் ரூ. 50 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். அட்லி ரூ. 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இசைமைப்பாளர்கள் ஒளிப்பதிவார்கள் சண்டை பயிற்சியாளர்கள் என பல டெக்னிஷியன்கள் சம்பளமும் தாறுமாறாக உயர்ந்து விட்டது.

- Advertisement -

ஆனால் சினிமாவை பொருத்தவரை பெண்களுக்கு அதுவும் நாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு ஹீரோவுடன் ஒப்பிடும் போது சம்பளம் மிக குறைவுதான். அதில் நயன்தாரா திரிஷா போன்றவர்கள் மட்டுமே ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை வாங்குகின்றனர். ஆனால் ஹீரோக்கள் 100 கோடி 200 கோடி ரூபாய் என சம்பளம் பெறுகின்றனர்.

இந்த சம்பள முரண்பாடு குறித்து இயக்குனர் சுதா கொங்கரா சமீபத்தில் ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். சினிமாவில் உள்ள இந்த ஆண் பெண் பாலின பாகுபாடு குறித்தும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இயக்குனர் சுதா கொங்கரா தமிழில் துரோகி இறுதிச்சுற்று சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கியவர். இப்போது சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சுதா கொங்கரா கூறியதாவது, ஒரு படத்தை ஒரு ஆண் இயக்குனர் இயக்கினால் அவருக்கு 100 கோடி சம்பளம் தரப்படுகிறது. அதே படத்தை நான் இயக்கினால் குறைவான சம்பளம் தரப்படுகிறது. எனக்கும் சமமான சம்பளத்திற்கு வழங்க வேண்டும் என்று நான் இன்றுவரை போராடி வருகிறேன்.

மேலும் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் படத்தின் வசூல் பல நடிகர்களின் வசூலை தாண்டினாலும் அந்த லேடி சூப்பர் ஸ்டார் சம்பளம் அந்த நடிகர்களின் சம்பளத்தில் 4ல் 1 விகிதம் தான் தருகிறார்கள் என்று சினிமாவில் உள்ள சம்பள பாகுபாடு குறித்து வெளிப்படையாக சுதா கொங்கரா பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பராசக்தி படத்தில் பெற்ற சம்பளம் பற்றி கூறுகிறாரா, பொதுவான கருத்தை சொல்கிறாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்