- Advertisement -
Homeபொழுதுபோக்குபழனி முருகன் கோவிலில் அந்த வேண்டுதலை நிறைவேற்றிய இயக்குனர் சுந்தர் சி - மூக்குத்தி அம்மன்...

பழனி முருகன் கோவிலில் அந்த வேண்டுதலை நிறைவேற்றிய இயக்குனர் சுந்தர் சி – மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக இருக்குமா?

- Advertisement -

இயக்குனர் மணிவண்ணனிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் சுந்தர் சி. பிறகு உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கார்த்திக் ரம்பா கவுண்டமணி செந்தில் மணிவண்ணன் நடித்த இந்த படம் மாஸ் ஹிட் படமாக அமைந்தது.

தொடர்ந்து முறைமாமன் மேட்டுக்குடி வின்னர் ரெண்டு கண்ணன் வருவான் அழகான நாட்கள் ஜானகிராமன் உனக்காக எல்லாம் உனக்காக சின்னா கிரி கலகலப்பு கலகலப்பு 2 அரண்மனை அரண்மனை 2 அரண்மனை 3 அரண்மனை 4 சமீபத்தில் வெளியான மதகஜ ராஜா என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வெற்றி பெற்றவர் இயக்குனர் சுந்தர் சி என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

காதல் காமெடி கவர்ச்சி என ஜாலியான படங்கள்தான் சுந்தர் சி ஜானர் படங்களாக இருக்கின்றன. நிச்சயமாக இரண்டரை மணி நேரம் ஜாலியாக நேரத்தை கழிக்க விரும்பினால் அதற்கு சுந்தர் சி இயக்கிய படங்கள் தாராளமாக கேரண்டி தரும் என்பதில் சந்தேகம் இல்லை. படங்களை டைரக்ட் செய்வது மட்டுமின்றி பல படங்களில் நாயகனாகவும் நடித்து வெற்றி பெற்றவராகவும் சுந்தர் சி இருக்கிறார்.

அரண்மனை 4 மற்றும் மதகஜ ராஜா படங்களை தொடர்ந்து இப்போது சுந்தர் சி இயக்கத்தில், மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் உருவாகிறது. இதில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடிக்கிறார். ஏற்கனவே ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாக மாஸ் ஹிட் ஆன நிலையில், அதே டைட்டிலில் 2ம் பாகத்தை சுந்தர் சி டைரக்ட் செய்கிறார்.

- Advertisement -

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். சில தினங்களுக்கு முன், சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் இந்த படத்தின் துவக்க விழா பூஜை சிறப்பாக நடந்தது. இதில் நடிகைகள் மீனா குஷ்பு நடிகர் ரவி மோகன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழனி மலை முருகன் கோவிலில் இயக்குனர் சுந்தர் சி மொட்டை போட்டுக்கொண்டுள்ளார். சுந்தர் சியின் மனைவி நடிகை குஷ்புவும் அவருடன் இருக்கிறார். இன்று அவர்களது 25ம் ஆண்டு திருமண நாள் என்று கூறப்படும் நிலையில் பழனி மலை முருகன் கோவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இயக்குனர் சுந்தர் சி முடி காணிக்கை செலுத்தியிருக்கிறார். ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 படம் வெற்றி பெற, வேண்டுதலாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்