- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரண்மனை 4 டிரெய்லர் வெளியீடு நிகழ்ச்சியில் திடீரென செய்தியாளர்கள் கேட்ட அந்த கேள்வி - ...

அரண்மனை 4 டிரெய்லர் வெளியீடு நிகழ்ச்சியில் திடீரென செய்தியாளர்கள் கேட்ட அந்த கேள்வி – திக்குமுக்காடிய இயக்குனர் சுந்தர் சி

- Advertisement -

நடிகர் கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானாவர் சுந்தர் சி. இவர் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக தொழில் கற்றவர். முதல் படமே மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் தொடர்ந்து அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், முறைமாமன், மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, அரண்மனை போன்ற வெற்றிப் படங்களை தந்து முன்னணி இயக்குனரானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பூவை காதலித்து, சுந்தர் சி திருமணம் செய்துக்கொண்டார். இதன்பிறகு குஷ்பூவின் கணவர் என்ற சிறப்பு அடையாளமும், கவனமும் அவர் பெற்றார். தொடர்ந்து இயக்குனராக இருந்த அவர், சுராஜ் இயக்கத்தில் தலைநகரம் படத்தில் ஹீரோவாக நடித்து நடிகர் சுந்தர் சியாக மாறினார்.

- Advertisement -

தொடர்ந்து அவர் இயக்கிய அரண்மனை 2, 3,4 என அவரே ஹீரோவாக நடித்து வருகிறார். குரு சிஷ்யன், முரட்டுக்காளை, வீராப்பு, இருட்டு என பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது சுந்தர் சி, தமன்னா, ராஷிக்கண்ணா, யோகிபாபு .உள்ளிட்டோர் நடித்த அரண்மனை 4 படத்தில் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரலில் இந்த படம் திரைக்கு வருகிறது. கடந்த பொங்கலுக்கு வரவேண்டிய இந்த படம், ஸம்மரில் வெளியாகிறது.

அரண்மனை 4 படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது விஜய் சேதுபதிதான். சந்தானமும் நடிக்க இருந்தார். ஆனால் அவர்களுக்கு கால்ஷீட் இல்லாததால், இறுதியில் சுந்தர் சியே ஹீரோவாக நடித்திருக்கிறார். கடந்த 2014ம் ஆண்டில் அரண்மனை படம் வெளியான நிலையில், 2016ம் ஆண்டில் அரண்மனை 2 படமும், 2021ல் அரண்மனை 3 படமும் வெளியானது. இப்போது அரண்மனை 4 திரைக்கு வருகிறது.

- Advertisement -

அரண்மனை 4 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சுந்தர் சி, தமன்னா, ராஷிக்கண்ணா, யோகிபாபு, படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஆப் ஆதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சுந்தர் சி, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேய் படங்களில் கிளாமர் எதற்கு, உங்களது படங்களில் அது அதிகமாக உள்ளதே என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சுந்தர் சி, பேய் படங்கள் என்றாலே பேய் பங்களா, வினோதமான உருவங்கள், இருட்டு, பயங்கர சத்தங்கள் இந்த குறியீடுகளை எல்லாம் நான் தவிர்க்க நினைத்தேன். என்னுடைய மற்ற படங்களில் அழகியல் நிறைய இருக்கும். அதுபோலவே பேய் படங்களிலும் அதை புகுத்த நினைத்தேன். அதனால்தான் கிளாமர் பாடல்களை, பேய் படங்களிலும் கொண்டு வருகிறேன், என்று கூறி ஒருவாறு சமாளித்திருக்கிறார் சுந்தர் சி.

- Advertisement -

சற்று முன்