தமிழ் சினிமாவில் ஜனரஞ்சக இயக்குனராக பெயர் வாங்கியவர் இயக்குனர் சுந்தர் சி. கடந்த 1996ம் ஆண்டில் அவர் முதன்முறையாக டைரக்ட் செய்த படம் உள்ளத்தை அள்ளித்தா. காமெடி கலந்த காதல் படமான இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து முறைமாமன் மேட்டுக்குடி வின்னர் ரெண்டு உனக்காக எல்லாம் உனக்காக உள்ளிட்ட பல படங்களை சுந்தர் சி இயக்கி வெற்றி பெற்றார்.
நடிகர் ரஜினி நடித்த அருணாசலம் கமல் நடித்த அன்பே சிவம் போன்ற படங்களை இயக்கி வெற்றி பெற்றார். சினிமா இயக்குனராக மட்டுமின்றி நடிகராவும் சுந்தர் சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தலைநகரம் வீராப்பு சண்ட முரட்டுக்காளை குரு சிஷ்யன் அரண்மனை 4 இருட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்து நாயகனாகவும் வலம் வருகிறார்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் சுந்தர் சி இயக்கிய படம் மதகஜ ராஜா. விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி சுவாமிநாதன் ஆர் சுந்தர்ராஜன் மனோபாலா மணிவண்ணன் சோனு சூட் சடகோபன் ரமேஷ் நிதின் சத்யா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.
இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு மீண்டும் விஷால் சுந்தர் சி கூட்டணியில் புதிய படம் உருவாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் மீண்டும் காமெடி ரோலில் நடிக்க நடிகர் சந்தானத்துக்கு ரூ. 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. இதற்கிடையே நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை இயக்கவும் சுந்தர் சி ஆயத்தமாகி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி கூறியதாவது, கடந்தாண்டில் வெளியான கில்லி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை 2 கே கிட்ஸ் கொண்டாடினர். அதே போல் 1990களில் வெளியான படம் உள்ளத்தை அள்ளித்தா. இந்த படத்தையும் பலர் பார்த்திருக்க மாட்டார்கள்.
அதனால் நான் முதன்முதலாக டைரக்ட் செய்த உள்ளத்தை அள்ளித் தா படத்தை ரி ரிலீஸ் செய்ய ஆசைப்படுகிறேன். அதுமட்டுமின்றி அந்த படத்தில் கார்த்திக் கவுண்டமணி காம்பினேஷன் சூப்பராக இருந்தது. அவர்களது காமெடி நடிப்பை மீண்டும் நான் திரையில் பார்க்க ஆசைப்படுகிறேன். அவர்கள் 2 பேருக்காகவும் அந்த படத்தை ரி ரிலீஸ் செய்ய மிகவும் ஆசையாக உள்ளது, என்று அந்த நேர்காணலில் இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார்.





