நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கும் கோட் படத்துக்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு, பெரிய நடிகராக உச்சத்தில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இன்னும் இந்த சம்பளத்தை வாங்கவில்லை. ஆனால், ரஜினி 172 படத்தில் அவர் பெறப்போகும் சம்பளம் ரூ. 210 கோடி என்று கூறப்படுகிறது.
புரட்சி இயக்குநர் என்று கடந்த 1980, 90களில் பெயர் பெற்றவர் எஸ்ஏ சந்திரசேகர். அந்த காலகட்டத்தில் ரஜினி, விஜயகாந்த் போன்ற நடிகர்களை வைத்து புரட்சிக்கரமான சிந்தனைகளை மையப்படுத்திய கருத்துகளை கதையாக்கி படங்களை தந்தவர்.
பல படங்களின் ஷூட்டிங், விஜய் வீட்டில்தான் நடந்திருக்கிது. குறிப்பாக விஜயகாந்த் படப்பிடிப்பு நடக்கும் போது விஜய் வீட்டில் இருந்த அவரது அறையை, நடிகர் ஆனந்தராஜ் பலமுறை தங்கி ஓய்வெடுத்து இருக்கிறார். அப்படி பலமுறை சிறுவனாக இருந்த விஜய் அறையில், ஆனந்தராஜ் தங்கியதாக ஒரு நேர்காணலில் அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அப்பா சினிமா இயக்குநர், அம்மா சினிமாவில் பாடுகிறார். தாய்மாமா எஸ்என் சுரேந்தரும் பாடகர் என்ற நிலையில், சின்ன வயதில் இருந்தே சினிமாவில் நடிக்கும் ஆசை விஜய்க்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அப்போதே சில முக்கிய நடிகர்களின் படங்களை தியேட்டர்களுக்கு சென்று விரும்பி பார்ப்பது விஜய் வழக்கம்.
அப்படிதான், மணிரத்னம் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த திருடா திருடா படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அப்போது பிரசாந்த் படத்தை பார்க்க தியேட்டர் தியேட்டராக அலைந்தும் விஜய்க்கு டிக்கெட் கிடைக்கவில்லை. 3 நாட்களாகியும் பிரசாந்த் நடித்த அந்த படத்தை பார்க்க முடியவில்லையே என விஜய் அந்த இளம் வயதில் மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார்.
அப்படி இளம் வயதில் பிரசாந்த் நடித்த படத்தை பார்க்க தியேட்டர், தியேட்டராக விஜய் அலைந்த அந்த காலகட்டம் மாறி, இன்று விஜய் படத்திலேயே விஜய்க்கு நண்பராக பிரசாந்த் நடிக்கிறார். இதுகுறித்து தன் நண்பர்களிடம் கூறி விஜய் சமீபத்தில் சந்தோஷப்பட்டு இருக்கிறார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் பிரசாந்திடம் மிகவும் ஜாலியாக பேசி, இருவரும் தங்களது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.





