- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்துக்காக என் மகளுக்கு ஸ்கூல்ல சீட் கொடுத்தாங்க - நடந்ததை அப்படியே சொன்ன இயக்குனர்...

அந்த படத்துக்காக என் மகளுக்கு ஸ்கூல்ல சீட் கொடுத்தாங்க – நடந்ததை அப்படியே சொன்ன இயக்குனர் சுந்தர் சி!

- Advertisement -

ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, அன்பே சிவம் படம் ரிலீஸ் ஆகி ஒரு வருஷத்துக்கு அப்புறம் என்னோட பொண்ணுக்கு ஒரு பெரிய ஸ்கூல்ல சீட் கேட்க போனோம். குழந்தை பிறந்த உடனே லைன்ல இருந்து சீட்டு வாங்கிட்டு போறாங்க. நீங்க இப்போ வந்து கேக்கறீங்களேன்னு சிரிச்சாங்க. எதுக்கும் பிரின்சிபால் கிட்ட கேட்டுப் பார்ப்போம் என்று சொன்னோம். அவங்க நார்த் இந்தியன். சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அன்பே சிவம் அவ்வளவு அருமையா இருந்தது. ஏன் அந்த மாதிரி படம் தமிழ்ல வர மாட்டேங்குதுன்னு கேட்டாங்க. உடனே என் மனைவி குஷியாகி மேடம் இவர்தான் அந்த படத்தோட டைரக்டர் என்று சொன்னாங்க. அவங்க ஷாக் ஆகி நீங்களா அந்த டைரக்டர்? அன்பே சிவம் டைரக்டருக்கு நான் சீட் கொடுத்து ஆகணும்ன்னு சொல்லி என் பொண்ணுக்கு சீட் கொடுத்தாங்க என்று சுந்தர் சி கூறியிருக்கிறார்.

சற்று முன்