- Advertisement -
Homeபொழுதுபோக்குஇத்தனை வெற்றிப் படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்தும் இன்னும் என்னை அப்படிதான் சொல்றாங்க - ஆதங்கத்தை...

இத்தனை வெற்றிப் படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்தும் இன்னும் என்னை அப்படிதான் சொல்றாங்க – ஆதங்கத்தை வெளிப்படுத்திய இயக்குனர் சுந்தர் சி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் மணிவண்ணன். அவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சுந்தர் சி. நடிகர் கார்த்திக் ரம்பா கவுண்டமணி செந்தில் மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்த உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். காமெடி காதல் கலந்த இவரது முதல் படமே பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து முறைமாமன் மேட்டுக்குடி அருணாசலம் அன்பே சிவம் வின்னர் ரெண்டு அரண்மனை மதகஜ ராஜா ஆம்பள உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார். இதில் அரண்மனை 2 3 மற்றும் 4 என தொடர்ந்து வெளியாகி பெரிய வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக அரண்மனை 5 படமும் விரைவில் உருவாக உள்ளது.

- Advertisement -

இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் சுந்தர் சி பல வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். குறிப்பாக தலைநகரம் தீ முரட்டுக்காளை குரு சிஷ்யன் ஐந்தாம் படை முத்தின கத்திரிக்காய் என பல படங்களில் நடித்து நடிகராகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். நடிகராக இயக்குனராக இருந்து வரும் சுந்தர் சி தொடர் வெற்றி படங்களை தரும் இயக்குனராகவும் உள்ளார்.

இப்போது நடிகை நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருக்கிறார். ரெஜினா கசாண்ட்ரா இனியா துனியா விஜய் யோகிபாபு உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஹிப்ஆப் ஆதி இந்த படத்துக்கு இசை அமைக்கிறார். இந்த படத்தை 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி கூறியதாவது, இத்தனை படங்கள் நான் பண்ணியிருக்கேன். ஆனால் இப்பவும் என்கூட ஒட்டிக்கிட்ட இருக்குற ரெண்டு விஷயம். அதுல ஒண்ணு இன்னமும் நான் குஷ்பூ புருஷன்தான். இன்னமும் கிராமப்புறங்களில் சின்ன ஊர் பக்கம் எல்லாம் போனால் லேடீஸ்க்கெல்லாம் நான் இன்னும் குஷ்பூ புருஷன்தான்.

நான் இயக்குனர் சுந்தர் சி. அந்த படம் பண்ணி இருக்கேன். இந்தப் படம் பண்ணி இருக்கேன் என்று சொன்னால் கூட அதெல்லாம் ஒத்துக்கவே மாட்டாங்க. அப்புறம் ரெண்டாவது, ரஜினி படம் இயக்கியதால் அருணாசலம் படத்தின் டைரக்டர் என்பார்கள். இந்த இரண்டு விஷயம்தான் எப்பவும் என்கூட ஒட்டிக்கிட்டு இருக்கு என்று இயக்குனர் சுந்தர் சி ஆதங்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்