- Advertisement -
Homeபொழுதுபோக்குகேங்கர்ஸ் படம் பிரமோசன் நிகழ்ச்சி - காட்டுக்கு வாங்க… களத்துல இறங்குங்க என நடிகர் சிம்புவை...

கேங்கர்ஸ் படம் பிரமோசன் நிகழ்ச்சி – காட்டுக்கு வாங்க… களத்துல இறங்குங்க என நடிகர் சிம்புவை அழைத்த இயக்குனர் சுந்தா் சி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் பட இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. கடந்தாண்டில் வெளியான அவரது அரண்மனை 4 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. அதே போல் கடந்த ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான மதகஜ ராஜா படமும் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்தது.

மதகஜ ராஜா 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படமாக இருந்தும் இந்த காலகட்டத்துக்கும் பொருத்தமான ரசிக்கும் விதமாக கதைக்களத்தில் இருந்ததால் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். நடிகர் விஷாலுக்கும் இந்த படம் கம்பேக் கொடுத்தது.

- Advertisement -

இதையடுத்து இப்போது சுந்தர் சி இயக்கி நடித்துள்ள கேங்கர்ஸ் படம் வருகிற ஏப்ரல் 24ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் நாயகியாக கேத்தரின் தெரசா நடித்திருக்கிறார். மேலும் பல ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தில் சுந்தர் சி வடிவேலு கூட்டணி இணைந்திருக்கிறது. இதில் 5 கெட்டப்களில் வடிவேலு நடித்திருக்கிறார்.

சமீபத்தில் கேங்கர்ஸ் படம் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் சுந்தர் சி, நடிகர் சிலம்பரசன் குறித்து பேசியதாவது, எஸ்டிஆரை சகலகலா வல்லவன் என்று அவரை சொல்லலாம். நிறைய விஷய ஞானம் உள்ளவர். நான் அவரிடம் பேசி ஒரு வருடம் ஆகிவிட்டது. 4 நாட்களுக்கு முன்பு கேங்கர்ஸ் டிரெய்லர் பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து ஒரு மணி நேரம் பேசினார்.

- Advertisement -

அப்போது வடிவேலு நடிப்பு குறித்து பாராட்டினார். அதிலும் வடிவேலு கேரக்டர் அவருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அண்ணனை திரையில் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. ரொம்பவும் மகிழ்ச்சியாக உள்ளது. பிரமாதமாக பண்ணியிருக்கிறார். அண்ணன்கிட்ட சொல்லுங்க என்று என்னிடம் சொன்னார்.

அப்போ நான் அவர்கிட்ட சொன்னேன். நீங்க தூங்கீட்டு இருக்கிற சிங்கம். சிங்கத்தின் பவர் தெரியாம ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கிறார். மறுபடி காட்டுக்கு வாங்க. களத்தில் இறங்குங்க என்று அவரிடம் நான் சொன்னேன். அவர் ஒரு பென்டாஸ்டிக் நடிகர் என்று இயக்குனர் சுந்தர் சி சிம்பு குறித்து அந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது நடிகர் வடிவேலுவும் உடனிருந்தார்.

- Advertisement -

சற்று முன்