- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் அரசியலில் புலியா என்றால் எனக்கு சொல்லத் தெரியலே… ஆனா அது மட்டும் எனக்கு...

நடிகர் விஜய் அரசியலில் புலியா என்றால் எனக்கு சொல்லத் தெரியலே… ஆனா அது மட்டும் எனக்கு நல்லாத் தெரியும் – இயக்குனர் டி ராஜேந்தர் போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக தமிழக அரசியல் களத்திலும் கலக்கி வருகிறார். விக்கிரவாண்டி மதுரை மாநாடுகளை தொடர்ந்து இப்போது மாவட்டம் வாரியாக மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று நாகை மற்றும் திருவாரூரில் அவர் மக்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் புலி. அந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தர், நடிகர் விஜயை மேடையில் புகழ்ந்து தள்ளினார். இது அசத்தல் புலி அடங்காத புலி அற்புதமான புலி கலைப்புலி எதிலும் தோற்காத புலி என அடுக்குமொழியில் பேசி ஒரு கட்டத்தில் விஜயே மேடைக்கு ஓடிச் சென்று டி ராஜேந்தரை பேசவிடாமல் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகராக இயக்குனராக பாடகராக தயாரிப்பாளராக மட்டுமின்றி அரசியல் களத்திலும் டி ராஜேந்தர் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் திமுக ஆதரவாளராக இருந்த டி ராஜேந்தர் பிறகு லட்சிய திமுக என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். ஆனால் சினிமாவில் ஜெயித்த அளவுக்கு டி ராஜேந்தர் அரசியலில் பெரிய வரவேற்பை பெறவில்லை. அவரது மகன் சிம்புவும் ஒரு முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் டி ராஜேந்தர் கூறியதாவது, தமிழ் சினிமா கலையுலகில் விஜய் காலடி எடுத்து வைத்தவுடன் கதாநாயகன் ஆனவுடனே ரத்தின கம்பளம் விரித்து தமிழ் திரையுலகம் அவரை வரவேற்றதா? அப்போதே அவருக்கு இளைய தளபதி என்ற பட்டம் கொடுத்து, இளைய தளபதி இனி நீதான் தமிழ் கலையுகத்தின் அதிபதி என்று எதாவது புகழ் மாலை சூட்டியதா?

- Advertisement -

சூட்டலையே, எவ்வளவு எல்லாம் தூற்றி இருப்பாங்க. பலர் தூற்றியதை எல்லாம் மீறி அவர்களையே போற்ற வைக்கக்கூடிய அளவுக்கு இன்றைக்கு புகழ் ஏணியில் உச்சியில் ஏறி நின்று கலையுலகத்தில் தனிக்கொடியை பிடிச்சு காமிச்சாரே? அவர் கலையுலகத்தில் புலி இல்லையா?

இன்னொன்று அவர் அரசியல் உலகத்தில் புலியா இல்லையான்னு கேட்டா எனக்கு சொல்லத் தெரியலே. ஆனா சில அரசியல் கட்சிகளோட வயித்துல புளியை கரைச்சிட்டார் என்பது மட்டும் உண்மை என்று நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தா் பேசியிருக்கிறார். நடிகர் விஜய் தொடர்ந்து திமுக குறித்து ஆவேசமாக விமர்சித்து வரும் நிலையில் திமுக கட்சியினர் வயிற்றில் விஜய் புளியை கரைத்துக்கொண்டிருக்கிறார் என்று சூசகமாக கூறியிருக்கிறார் என்று தவெகவினர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்