- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடத்தும் அரசியல் கட்சி மாநாட்டுக்கு போலீசார் அனுமதித்தது இத்தனை ஆயிரம் பேர் தானா? ஆளுங்கட்சி...

விஜய் நடத்தும் அரசியல் கட்சி மாநாட்டுக்கு போலீசார் அனுமதித்தது இத்தனை ஆயிரம் பேர் தானா? ஆளுங்கட்சி இப்போதே உள்ளடி வேலையை துவங்கி விட்டதா? – என்ன செய்யப் போகிறார் தளபதி?

- Advertisement -

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தனது அரசியல் கட்சி பிரவேசத்தை அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி பெயரை அறிவித்த அவர், 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, முதல்வர் பதவியில் அமர்வதுதான் தனது லட்சியம் என்று பகிரங்கமாக அறிவித்தார். இது ஆளும்கட்சியான திமுகவை பலத்த அதிருப்தியடைய செய்தது.

தொடர்ந்து கடந்த மாதம் 22ம் தேதி, பனையூரில் தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய், தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற கட்சி பாடலையும் அறிமுகப்படுத்தினார். இதில் கட்சி கொடியில் யானைகள் இருப்பது குறித்தும் பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

இதற்கிடையே வரும் 23ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் 1.5 லட்சம் மக்கள், கட்சியினர் பங்கேற்க உள்ளதாகவும், போலீசார் தரப்பில் பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டும் விஜய் கட்சி தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பியிடம் நேரடியாக இந்த மனு அளிக்கப்பட்ட நிலையில், 21 விதமான கேள்விகளை கேட்டு போலீஸ் விவரங்கள் கேட்டிருந்தனர். அதன்படி மாநாட்டில் பங்கேற்கும் மக்கள் எண்ணிக்கை, விஜபிகள் வருகை விவரங்கள், உணவு வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம், போக்குவரத்து நெரிசல் தவிர்க்க என்ன ஏற்பாடுகள் என 21 விதமான கேள்விகள் அதில் கேட்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

இதற்கு தவெக கட்சி தரப்பில் பதில் அளிக்கப்பட்ட நிலையில் இப்போது இந்த மாநாட்டில் பங்கேற்க 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என விழுப்புரம் மாவட்ட போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநாட்டில் 30 ஆயிரம் ஆண்கள், 15 ஆயிரம் பெண்கள், 5 ஆயிரம் முதியவர்கள், 500 மாற்றுத்திறனாளிகள் வரை கலந்துக்கொள்ள இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் கூறியிருக்கிறார்.

திருச்சி அல்லது மதுரையில் இந்த மாநாடு நடத்தப்பட்டு இருந்தால் 10 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இந்த மாநாட்டை நடத்த வைத்து, 50 ஆயிரம் மட்டுமே அனுமதி என்ற நெருக்கடி தந்து, திமுக அரசு விஜயின் வளர்ச்சியை தடுக்க இப்போதே உள்ளடி வேலையை ஆரம்பித்து விட்டது. லட்சக்கணக்கில் மக்கள் திரண்டால் விஜய்க்கு உள்ள அரசியல் செல்வாக்கு தெரிந்துவிடுமே என்று இப்போதே அரசியலை துவங்கி விட்டது என திமுக அரசை பலரும் விமர்சிக்க துவங்கி விட்டனர்.

- Advertisement -

சற்று முன்