- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மகன் சிம்புவின் திருமணம்… - மனம் கலங்கிப் பேசிய இயக்குனர் டி ராஜேந்தர், ஒரு...

என் மகன் சிம்புவின் திருமணம்… – மனம் கலங்கிப் பேசிய இயக்குனர் டி ராஜேந்தர், ஒரு அப்பாவாக அவர் பேசிய வார்த்தைகள்…. கண்ணீர் கசிந்த ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனராக நடிகராக இசையமைப்பாளராக தயாரிப்பாளராக பாடகராக கடந்த 1980 – 90களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் டி ராஜேந்தர். குறிப்பாக அவரது இயக்கத்தில் வெளிவந்த ஒரு தலை ராகம் மைதிலி என்னை காதலி உயிருள்ளவரை உஷா ஒரு தாயின் சபதம் என் தங்கை கல்யாணி உறவைக் காத்த கிளி என பல படங்கள் சில்வர் ஜூப்ளி படங்களாக இருந்தன.

இப்போதும் டி ராஜேந்தர் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். அவரது மகன் சிம்பு என்கிற சிலம்பரசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தந்தை டி ராஜேந்தரை போலவே மகன் சிலம்பரசனும் நடிப்பு இசை இயக்கம் நடனம் பாட்டு தயாரிப்பு என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சிறந்த கலைஞராக தன்னை நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

ஆனால் வயது 42 கடந்தும் இன்னும் சிலம்பரசன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. பல நடிகைகளுடன் அவர் காதல் கிசுகிசுவில் சிக்கினார். காதல் தோல்விகளையும் சந்தித்தார். அவரது தம்பி குறளரசன் தங்கை இலக்கியா போன்றவர்கள் திருமண வாழ்க்கை நடத்தி வரும் நிலையில் எஸ்டிஆர் மட்டும் இன்னும் முரட்டு சிங்கிளாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார்.

சிலம்பரசனின் தந்தை இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியில் நடுவராக கலந்துக்கொண்டார். அப்போது அவரிடம், டிவி சீரியல் நடிகை சாந்தினி, நான் திருமணம் செய்தால் சிம்புவை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினார். இதைக் கேட்டதும் நடுவராக அங்கு அமர்ந்திருந்த டி ராஜேந்தர் எமோஷனல் ஆகிவிட்டார்.

- Advertisement -

அப்போது டி ராஜேந்தர் கூறியதாவது, நானும் மனுஷன்தானேம்மா. எனக்கும் இதயம் இருக்கு. மனைவியை விரும்புவது மட்டுமல்ல பிள்ளைகளை நேசிப்பதும் காதல்தான் பாசம்தான். உன் பேச்சு எனக்கு தப்பா தெரியலே. ஆனாலும் அது என் மனசை காயப்படுத்தத்தான் செய்யுது. என் பையனை உயிருக்கு உயிராக நேசிக்கக்கூடிய ஒரு பெண்ணை கடவுள் கொடுக்கணும்.

நான் என் மகனிடம் சென்று நீ கல்யாணம் பண்ணிக்கறியா என கேட்க மாட்டேன். நான் எதுவாக இருந்தாலும் இறைவனிடம் மட்டும்தான் கேட்பேன். நாங்கள் வற்புறுத்தினால் அவன் மறுக்க மாட்டான். ஆனாலும் நானோ என் மனைவியோ என் மகனை வற்புறுத்த மாட்டோம் என்று கண்ணீர் மல்க டி ராஜேந்தர் அப்போது கூறினார். இதைக் கேட்டு அங்கிருந்த பார்வையாளர்கள் மனம் கலங்கி கண்ணீர் சிந்தினர்.

- Advertisement -

சற்று முன்