- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிகண்டன் நடிப்பில் வரும் 24ல் வெளியாகும் குடும்பஸ்தன் படம்; இது யாருடைய கதை? ஓபனாக சொன்ன...

மணிகண்டன் நடிப்பில் வரும் 24ல் வெளியாகும் குடும்பஸ்தன் படம்; இது யாருடைய கதை? ஓபனாக சொன்ன இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனை போலவே வேகமாக வளர்ந்து வரும் நடிகராக மணிகண்டன் இருக்கிறார். காலா ஜெய்பீம் குட்நைட் லவ்வர் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகர் மணிகண்டன். இப்போது அவரது நடிப்பில் குடும்பஸ்தன் படம் வருகிற 24ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் மணிகண்டனுடன் சான்வே மேக்னா குரு சோமசுந்தரம் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு வைசாக் இசை அமைத்து இருக்கிறார். சுஜித் என் சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்தின் இயக்கியவர், யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலமான நக்கலைட்ஸ் தொடரின் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி. கோவை கொங்கு மக்களின் வாழ்க்கை முறை, அங்கு இருக்கும் யதார்த்த வாழ்க்கையை பள்ளி கல்லூரி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் நண்பர்கள் பெற்றோர்கள் கேரக்டர்களை கொண்டு அருமையாக எபிசோடுகளை தந்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்.

இப்போது முதன்முறையாக குடும்பஸ்தன் படம் மூலம் திரைப்பட இயக்குனராக களத்துக்கு வந்திருக்கிறார். லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷின் குடிகார நண்பராக நடித்த ஜென்சன் திவாகர் நக்கலைட் வீடியோக்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் பிரசன்னா பாலச்சந்திரன், அருண்குமார், சசிக்குமார் என ஒரு பட்டாளமே இவரது நக்கலைட்ஸ் குரூப்தான்.

- Advertisement -

குடும்பஸ்தன் படம் குறித்து இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி கூறியதாவது, என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து உருவான கதைதான் குடும்பஸ்தன். நானும் பிரசன்னா பாலச்சந்திரனும் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதத் தொடங்கினோம். கதையாக எழுதும்போதே எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்தில் வரும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் ரசிகர்கள் தங்களுடன் நிச்சயம் பொருத்திப் பார்ப்பார்கள்.

குடும்ப வாழ்க்கை என்பது பொறுப்புடன் இருக்கக்கூடிய ஆனந்தமான அனுபவம். இந்த கதையில் கதாநாயகன் திருமணத்திற்கு பிறகு சந்திக்கும் சம்பவங்களை காமெடி மற்றும் பொழுதுபோக்கு கலந்து தந்திருக்கிறோம். பக்கத்து வீட்டு பையன் போல இருக்கும் மணிகண்டன் படத்தில் தனது தேர்ந்த நடிப்பால் ரசிகர்களை நிச்சயமாக கவர்வார். குடும்பஸ்தன் படம் சிறப்பு சிரிப்பு விருந்தாக மகிழ்ச்சியான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும். இது என்னுடைய சொந்த கதை என்று ராஜேஷ்வர் காளிசாமி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்