- Advertisement -
Homeபொழுதுபோக்குஆரம்பமே அதிரடி சரவெடி தான், துதிபாடும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு சாட்டையடி தர தயாரான தளபதி...

ஆரம்பமே அதிரடி சரவெடி தான், துதிபாடும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு சாட்டையடி தர தயாரான தளபதி விஜய் – அரசியல் முதல் மாநாட்டில் கொல மாஸ் சீன் நிறையா இருக்கு…

- Advertisement -

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் விஜய் இப்போது அரசியல் இயக்கத் தலைவராக உருவெடுத்து இருக்கிறார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் தலைவராக அவர் தனது அரசியல் முதல் மாநாட்டை வரும் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி சாலை என்னும் கிராமத்தில் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் மதுரை பிறகு திருச்சி என அரசியல் மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டு இருந்த நிலையில், அங்கெல்லாம் ஆளுங்கட்சியின் குறுக்கீடு மற்றும் இடையூறுகள் காரணமாக மாநாடு நடத்த இடம் கிடைக்கவில்லை. பல மாவட்டங்களில் பல இடங்களில் தேடி அலைந்து, இப்போது விக்கிரவாண்டியில் இந்த மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மாநாட்டில் பல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் வகையில் விஜய் திட்டமிட்டிருந்த நிலையில் இப்போது மாநாட்டில் ஐம்பதாயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி என்ற போலீசின் நெருக்கடி விஜயை அப்செட் செய்து இருந்தாலும், மாநாட்டில் பல பிரமாண்டமான விஷயங்களை செய்து ஆளுங்கட்சிக்கும் தமிழக அரசியல் கட்சிக்கும் சாட்டையடி தர விஜய் தயாராகி இருக்கிறார்.

இந்த மாநாட்டில் தனது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் எதிர்கால திட்டங்கள், தமிழக அரசியலில் அவர் செய்யப் போகும் மாற்றங்கள், தமிழக மக்களுக்கு செய்யப் போகும் வளர்ச்சி திட்டங்கள் என பல விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் விஜய் அறிவிக்க இருக்கிறார். மேலும் இந்த மாநாட்டில் பல முக்கிய சிறப்பம்சங்களும் இடம்பெறுகின்றன.

அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மாநாட்டில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் உருவப்படம் திறப்பு விழா நடக்கிறது. அதில் கட்சியின் பொதுச்செயலாளரும் விஜயகாந்த் மனைவிமான பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்ற உள்ளார். மேலும் ரஜினி அரசியல் கட்சிக்கு வருவார் என்று பல ஆண்டுகளாக காத்திருந்து ஏமாந்த ரஜினி ரசிகர் மன்றம் சார்ந்த நிர்வாகிகள், ரசிகர் கூட்டம் பெரிய அளவில் இந்த மாநாட்டில் விஜய் கட்சியில் இணைய உள்ளனர்.

அது மட்டும் இன்றி அதிமுக திமுக கட்சிகளில் பல ஆண்டுகளாக இருந்து எந்த பலனும் இல்லாமல் ஏமாற்றத்தில் உள்ள பல அரசியல் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி மாநாட்டு மேடை அமைக்க கலை இயக்குனர்கள் வசம் இந்த பொறுப்பு தரப்பட்டுள்ளது. ப்ளூ பிரிண்ட் தயார் செய்யப்பட்டு விஜயின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த பிரம்மாண்ட மாநாடு மேடை மற்றும் விழா பந்தல் அமைக்கப்பட இருக்கிறது.

சற்று முன்