- Advertisement -
Homeபொழுதுபோக்குபண்டிகை நேரத்தில் வாழ்த்துகளை தெரிவிக்கும் அரசியல் தலைவர்களுக்கு சூடு போட்ட இயக்குநர் தங்கர்பச்சான் - நீங்க...

பண்டிகை நேரத்தில் வாழ்த்துகளை தெரிவிக்கும் அரசியல் தலைவர்களுக்கு சூடு போட்ட இயக்குநர் தங்கர்பச்சான் – நீங்க வேற லெவல் டைரக்டரே…

- Advertisement -

இயக்குநர் தங்கர்பச்சான், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களின் ஒருவர். யதார்த்தமான கதைகளை, படங்களாக்கி ரசிகர்களுக்கு தருபவர், இவரது அழகி படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. சொல்ல மறந்த கதையில் இயக்குநர் சேரனை, சிறந்த நடிகராக்கி இருப்பார் தங்கர்பச்சான்.

அம்மாவின் கைபேசி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், கருமேகங்கள் கலைகின்றன, தென்றல், சிதம்பரத்தில் அப்பாசாமி என படங்களை இயக்கவும், அதில் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் தங்கர்பச்சான். சமீபத்தில் வெளிவந்த அவரது கருமேகங்கள் கலைகின்றன படம், நல்ல படம் என விமர்சிக்கப்பட்டது. ஆனால், பெரிய வரவேற்பை பெறவில்லை.

- Advertisement -

எப்போதுமே, தங்கர் பச்சான் படங்கள் யதார்த்தத்தை பேசி இருக்கின்றன. மற்ற இயக்குநர்கள் போல மசாலா படங்களையோ, அதிக வசூல் தரும் ஜனரஞ்சகமான படங்களையோ ரசிகர்களிடம் திணிக்காத முக்கிய இயக்குநர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் இருப்பவர் தங்கர்பச்சான்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் இப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் (எக்ஸ்சில்) ஒரு பதிவை செய்திருக்கிறார் தங்கர்பச்சான். அதில் திணிக்கப்பட்ட தீபாவளியையும், தமிழர்களின் திருநாளாக பொங்கல் பண்டிகையும் வசதி படைத்தவர்கள் மட்டுமே, எப்போதும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

பிள்ளைகளுக்காக, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்காகவும், படாத பாடுபட்ட பண்டிகைகளை கடத்தும் நாட்களை விட, உண்மையான சந்தோஷத்தில் வாழும் நாட்களே உண்மையான பண்டிகை நாட்களாக ஏழை எளிய மக்களுக்கு இருக்கும். அதுதான் பெற்றோர்கள் உண்மையாக கொண்டாடும் திருநாட்களாக இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைக்காக பண்டிகை நாட்களில் வாழ்த்துகளை மக்களுக்கு தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள், மக்களின் உண்மையான நிலையை கவனத்தில் கொண்டு, அதுகுறித்தும் சிந்திக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார் இயக்குநர் தங்கர்பச்சான். தனது படங்களை போலவே இந்த டிவிட்டர் பதிவிலும் தனது சிந்தனையை வெளிப்படுத்தி இருக்கிறார் தங்கர்பச்சான்.

- Advertisement -

சற்று முன்