- Advertisement -
Homeபொழுதுபோக்குகாணாமல் போன 35 லட்ச ரூபாய், திடீரென படப்பிடிப்பில் இருந்து எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன், ஒரே...

காணாமல் போன 35 லட்ச ரூபாய், திடீரென படப்பிடிப்பில் இருந்து எஸ்கேப் ஆன சிவகார்த்திகேயன், ஒரே மர்மமா இருக்கே

- Advertisement -

சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு”, “அது இது எது” ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் மிக பிரபலமானார். தொலைக்காட்சியில் இருக்கும்போதே ஒரு நட்சத்திரமாக திகழ்ந்த சிவகார்த்திகேயன் அதனை தொடர்ந்து “மெரினா” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்.

“மெரினா” திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல ஒரு என்ட்ரி ஆக அமைந்தது. அதன் பின் அவர் நடித்த “மனம் கொத்தி பறவை”, “எதிர் நீச்சல்” போன்ற பல திரைப்படங்கள் வெற்றி வெற்றது. அதே நேரத்தில் தமிழ் சினிமா ஃபேமிலி ஆடியன்ஸகளை கைக்குள் போட்டுக்கொண்டார். அஜித், விஜய் ஆகியோரின் திரைப்படங்களுக்கு எந்தளவுக்கு ஓபனிங் இருக்கிறதோ அந்தளவுக்கு சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கும் ஓபனிங் இருக்கும். அந்தளவுக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துவிட்டார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் செய்த ஒரு அதிர்ச்சி காரியத்தை குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் செம்புலி ஜெகன். இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஒரு முறை அவர் திரைப்படம் இயக்குவதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது. அப்போதுதான் சினிமாவில் அறிமுகமாகியிருந்த சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் பண்ணலாம் என நினைத்திருக்கிறார். அதன் படி சிவகார்த்திகேயனை சந்தித்து அவரை ஒப்பந்தமும் செய்திருக்கிறார்.

அத்திரைப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 15 நாட்கள் படப்பிடிப்பு சென்றபோது செம்புலி ஜெகனுக்கு தெரிந்த ஒருவர் ஜெகனை ஏமாற்றி 35 லட்ச ரூபாயை கொண்டு சென்றுவிட்டாராம். இந்த சம்பவம் நடந்த பிறகு சிவகார்த்திகேயனும் படப்பிடிப்பிற்கு வரவில்லையாம். இதனால் அந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டதாம். அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்போது வரை செம்புலி ஜெகனிடம் பேசக்கூட இல்லையாம்.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்